விக்ரம் படத்தால் லோகேஷ்க்கு வந்திருக்கும் பயம்.. தாமதமாகும் தளபதி 67

இயக்குனர் லோகேஷின் வளர்ச்சியில் தமிழ் சினிமாவில் அபரிமிதமாக உள்ளது. மாநகரம் படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றிருந்தது. ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவம் தான் மொத்த கதையும். ஆனால் லோகேஷ் தனது திரைக்கதை மூலம் அனைவரையும் பிரம்மிக்க செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடைந்தது. இதைவிட இவரால் ஒரு மிகப்பெரிய வெற்றியை அடைய முடியுமா என பலரும் கேட்ட நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் அதற்கான பதிலை அளித்துள்ளார் லோகேஷ்.

உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இப்படம் 400 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி உள்ளது. லோகேஷ் தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் விக்ரம் படத்தில் இயக்கியிருந்தார். அதற்கான வெற்றியையும் இப்படத்தில் அவர் சுவைத்துவிட்டார்.

அடுத்ததாக லோகேஷ் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கயுள்ளார். தற்போது விக்ரம் படம் மாபெரும் வெற்றியை அடைந்த உள்ள நிலையில் இதை விட பெரிதாக அடுத்த வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதனால் தற்போது தளபதி 67 படத்தில் லோகேஷ்க்கு ஒரு பயம் வந்துள்ளதாம்.

இதனால் ஏற்கனவே லோகேஷ் இப்படத்தின் கதையை தயார் செய்து வைத்த நிலையில் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது லோகேஷ் கதையில் சில மாற்றங்கள் செய்து வருகிறார். இதனால் தளபதி 67 படம் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம்.

அதிலும் விஜய்யின் கதாபாத்திரத்தை செதுக்கி கொண்டிருக்கிறாராம் லோகேஷ். மேலும் மீண்டும் விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 67 படம் விக்ரம் படத்தை காட்டிலும் ஒரு படி மேலாக தான் இருக்கும் என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். மேலும் இந்த படம் முழுக்க முழுக்க லோக்கேஷின் படமாக அமைய உள்ளது.