95 கிலோ எடையின் சீக்ரெட்.. அஜித்துக்கு தலைவலியாக இருக்கும் பிரச்சனை

அஜித் தற்போது ஒரு வழியாக விடாமுயற்சிக்கு தயாராகி விட்டார். அதாவது இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தலைப்பை தான் இப்போது சோசியல் மீடியாவில் பலரும் விவாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த தலைப்பு திருப்தி தரவில்லை என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் அஜித் பற்றிய முக்கிய சீக்ரெட் ஒன்று இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அஜித் ஆரம்ப கால கட்டங்களில் அளவான உடல் வாகுடன் இருந்தார். அந்த வகையில் அவருடைய உடல் எடை சில வருடங்களுக்கு முன்பு வரை 60 கிலோவாக இருந்தது.

Also read: ஏகே 62 டைட்டிலால் கிடைத்த ஏமாற்றம்.. ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

ஆனால் அதன் பிறகு வந்த அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய உடல் எடை அதிகரித்து காணப்பட்டது. அதிலும் இப்போது அவருடைய எடை 95 கிலோவாக இருக்கிறது. இருப்பினும் அவர் ஃபிட்டாக தான் இருக்கிறார் என்ற ஒரு பேச்சும் நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் இந்த எடை அதிகரிப்புக்கு என்ன காரணம் என்பதை அஜித் வெளிப்படையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

என்னவென்றால் ஒரு முறை அவருக்கு முதுகு தண்டில் அடிபட்டிருந்தது. அப்போது அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சையின் காரணமாக தான் இப்படி அவருடைய எடை அதிகரித்து விட்டதாம். அது மட்டுமல்லாமல் அவர் எடுத்துக் கொண்ட மாத்திரைகளும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதில் ஸ்டீராய்டு அதிகமாக இருந்த காரணத்தினால் அஜித்தின் உடல் எடையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

Also read: AK 52,62 என ட்விட்டரை ஆக்கிரமித்த அஜித்.. இணையத்தையே அல்லோலப்படுத்தும் அஜித் ஃபேன்ஸ்

மேலும் இப்போதும் கூட அவர் அந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறாராம். அதன் காரணமாகவே உடல் எடையில் கவனம் செலுத்தியும் அவரால் அதை குறைக்க முடியவில்லை. ஆனால் இது தெரியாமல் பலரும் அவரை வெளிப்படையாகவே உருவ கேலி செய்து வருகின்றனர்.

இருப்பினும் இது போன்ற நெகட்டிவ் விஷயங்களை எல்லாம் அஜித் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது கிடையாது. அதுவே அவரை அடுத்தடுத்த நிலைக்கும் கொண்டு செல்கிறது. அந்த வகையில் பல மாதங்களாக இழுத்தடித்து வந்த அஜித்தின் படம் இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஏகே 62 டைட்டில் வெளியானது.. மீண்டும் வி சென்டிமென்டில் சிக்கிய அஜித்

- Advertisement -