சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால் கமலுக்கு வலைவிரித்த டாப் இயக்குனர்

உலக நாயகன் கமல்ஹாசனின் மார்க்கெட் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் தான். விஸ்வரூபம் 2 படத்தில் 35 கோடி சம்பளமாக பெற்று வந்த கமல் விக்ரம் படத்தின் வெற்றியால் இந்தியன் 2 படத்தில் 150 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

யாரும் சற்றும் எதிர்பார்க்காத அளவு ஒரு படத்தால் கமல் அபரிவிதமாக வளர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Also Read : டாப் இயக்குனர்களை வளர்த்துவிட்ட குருக்கள்.. கமல்ஹாசனிடம் வேலை செய்த ஜெயம் ரவி

இந்தச் சமயத்தில் கமலின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பே இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏனென்றால் கமலுக்கு 2026 வரை ஓய்வே இல்லையாம். அதுவரை கமல் பயங்கர பிசியாக உள்ளாராம். கிட்டத்தட்ட 4 முதல் 5 படங்கள் கமலின் லைன் அப்பில் உள்ளது.

அதாவது இந்தியன் 2, மகேஷ் நாராயணன் படம், பா ரஞ்சித்தின் படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம், சுபாஷ் நாயுடு என அடுத்தடுத்த படங்களில் கமல் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படவிழாவில் பேசிய ஐசரி கணேஷ் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறினார்.

Also Read : இந்தியன் 2 படத்திற்காக மும்பையிலிருந்து பறந்து வந்த டீம்.. சேனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல்

கமல், கமாலினி முகர்ஜி, ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஐசரி கணேஷ் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்குவதாக வாக்கு கொடுத்தாலும் இப்போதைக்கு இந்த படம் உருவாக சாத்தியமே இல்லை. அந்த அளவுக்கு கமல் நிற்க கூட நேரம் இல்லாத அளவுக்கு பட வேலைகளில் பிஸியாக உள்ளார். இதனால் 2026க்கு பிறகு இந்த படம் உருவாக வாய்ப்புள்ளது.

Also Read : 16 வருடங்களுக்குப் பின் இணையும் கமல், கௌதம் மேனன் கூட்டணி.. வேட்டையாடு விளையாடு 2 கதை இதுதான்