தத்தளிக்கும் ஆர்யாவின் சூப்பர்ஹிட் செகண்ட் பார்ட்.. நம்பி இருந்த ஒரு படமும் கோவிந்தாவா?

Actor Arya : ஆர்யாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் பயணத்தை புகைப்படம் மூலம் ஆர்யா வெளிப்படுத்தி இருந்தார்.

அதாவது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்திற்காக தனது உடம்பை இரும்பு போன்று மாற்றி இருந்தார் ஆர்யா. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியானது ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படம். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

இப்படம் திரையரங்கில் வெளியாகி இருந்தால் இன்னும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதை இயக்குனர் பா ரஞ்சித் அறிவித்தார்.

தாமதமாகவும் ஆரியாவின் சார்பட்டா பரம்பரை 2

இந்நிலையில் பா ரஞ்சித் விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நிலையில் அப்படத்தின் ரிலீசுக்கு பிறகு சார்பட்டா பரம்பரை 2 படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியானது. இப்படத்தை ஜி ஸ்டூடியோஸ் 90 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

ஆனால் இப்போது அவர்களிடம் போதிய நிதி இல்லாததால் சார்பட்டா பரம்பரை 2 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அதோடு இந்த படத்திற்காக ஆர்யாவுக்கு மட்டும் 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்யில் சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. ஆகையால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் பண நெருக்கடியில் அதுவும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்