திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

என்னப்பா இது எம்ஜிஆருக்கு வந்த சோதனை.. கைவிடப்பட்ட சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்

60 களில் சினிமாவை ஆட்சி செய்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. பெரும்பாலும் அடித்தட்டு மக்களுக்காக போராடும் படங்களில் எம்ஜிஆர் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில் அவரின் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை எம்ஜிஆரை இயக்கி, தயாரித்து இருந்தார்.இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எம்ஜிஆர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்தார்.

அதன் பின்பு முதலமைச்சர் ஆனதால் இப்படத்தை எம்ஜிஆரால் எடுக்க முடியாமல் போனது. அவரின் இந்த ஆசை நிறைவேறாமல் போனதால் மீண்டும் இப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதாவது எம்ஜிஆரின் உருவத்தில் முழுக்க முழுக்க 3டி அனிமேஷன் படமாக எடுக்க திட்டமிட்டிருந்தனர்.

மேலும் இப்படத்திற்கு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என பெயரும் வைக்கப்பட்டிருந்தது. அதாவது உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜிஆரின் பெயர் விஞ்ஞானி ராஜுவாக இருந்தது. அதனால் இப்படத்திற்கு இவ்வாறு பெயர் வைக்கப்பட்டது. மேலும் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் ஐசரி கணேஷ் தயாரிக்கப் இருந்தார்.

மேலும் இப்படத்தில் ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், தேங்காய் சீனிவாசன் பலரை அனிமேஷனில் நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்து. ஆனால் தற்போது எம்ஜிஆரின் போட்டோவை அனிமேஷன் செய்யும் போது பெரிய அளவில் சொதப்பிவிட்டனர். அதுவும் அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு எம்ஜிஆர் போலவே இல்லை.

Mgr animation image

இதனால் இப்படத்தை எடுத்தாலும் கேலி, கிண்டலுக்கு உள்ளாகும். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஐசரி கணேஷ் இந்தப்படத்தை கைவிட்டு உள்ளாராம். இந்த போட்டோவை பார்த்த பலர் என்னப்பா இது எம்ஜிஆருக்கு வந்த சோதனை என கலாய்த்து வருகின்றனர்.

mgr animation image
- Advertisement -

Trending News