இது என்னப்பா ரத்னவேலுக்கு வந்த சோதனை.. வேண்டா வெறுப்பாய் ரஜினிக்காக ஓகே சொன்ன கதாபாத்திரம்

Rajini : மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த பகத் பாஸிலுக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விக்ரம் படத்தில் ஏஜென்ட் அமீராக மிரள விட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் ரத்னவேல் என்ற கேரக்டர் மூலம் தூக்கி சாப்பிட்டார். இப்போது தொடர்ந்து பகத் பாசிலுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பகத் பாஸிலும் இடம்பெறுகிறார். ரஜினிக்கு டஃப் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாஸில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

காமெடி கேரக்டரில் பகத் பாஸில்

ஆனால் வேட்டையன் படத்தில் காமெடி கேரக்டரில் பகத் பாஸில் நடிக்கிறார். வில்லனாக மிரட்டி வந்த பகத் பாஸில் ரஜினி படம் என்பதால் இதை ஒத்துக்கொண்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் பகத் பாசஸில் தரப்பிலிருந்து கூறப்படுவது வேறு.

அதாவது ஆரம்பத்தில் காமெடி கேரக்டர் என்று சொன்னபோது பகத் பாசிலே யோசித்துள்ளார். ஆனால் இயக்குனர் இந்த கதாபாத்திரத் தை சொன்னவுடன் பகத் பாஸிலுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். அதனால் தான் இந்த கேரக்டரில் நடிக்க சம்மதித்துள்ளார்.

ஆகையால் இதுவரை நடித்திடாத வித்தியாசமான கேரக்டரில் பகத் பாஸில் வேட்டையின் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தைப் பற்றிய அப்டேட்டுக்காக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்