ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கர்ப்பகால புகைப்படத்தை வெளியிடாத சின்மயி.. இதுதான் காரணமா?

பிரபல பாடகியான சின்மயி பற்றி இணையத்தில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதாவது சமீபத்தில் சின்மயிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைகளின் பிஞ்சு விரல்களின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இந்த மகிழ்ச்சியான விஷயத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் அந்த விஷயம் இணையத்தில் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. அதாவது ஒரு பக்கம் சின்மயிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபக்கம் கேலி செய்து பல கமெண்டுகள் வருகிறது. அதாவது சின்மயி தனது கர்ப்பகால புகைப்படங்கள் எதையுமே சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை.

மேலும் இவருக்கு திருமணமாகி 8 வருடங்கள் பிறகு குழந்தை பிறந்துள்ளது. இதனால் பலரும் இவரது சமூக வலைத்தளத்தில் வாடகைத்தாய் மூலமாகத்தான் நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டீர்களா என்று கேள்வியை எழுப்பி வந்தனர். அதில் சில வைரமுத்துவுடன் ஒப்பிட்டு கமெண்டுகளை போட்டு வந்தனர்.

அதிலும் குறிப்பாக ஒருவர் வைரமுத்து போல் இன்று போல் என்றும் புகழோடு வாழ்க வளமுடன் என பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த சின்மயி ஆத்திரமடைந்த டுவிட் ஒன்று போட்டிருந்தார். அதில், கடந்த 4 நாட்களாக நான் பார்த்த பல கமெண்ட்ஸ் இப்படிதான். இந்தப் பொறுக்கித்தனமான கலாச்சாரம் முற்போக்கு பெண்ணியம்னு பேசுற இந்த கேவலமான மக்கள்ட மட்டும்தான்.

மேலும் வைரமுத்து போன்ற உங்க உங்க வீட்டு கதவை தட்டட்டும் அப்ப புரியுமோ என்னவோ என சரியான பதிலடி கொடுத்தார். மேலும் நான் கர்ப்பமான விஷயத்தை சொல்லாததற்கு காரணம், தமிழ் நாட்டில் அதுவும் குறிப்பாக சமூக ஊடகங்களில் சாக்கடை குப்பைகள் தான் உரத்த குரல்.

அத்தகைய பெரியவர்களை சுற்றி தான் குழந்தைகள் இருப்பார்கள். அதனால் கவனமாக இருங்கள் இங்கு பெண்கள் பாதுகாப்பு என்பது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது என சின்மயி பதிவிட்டுள்ளார். மேலும் என் குழந்தைகளின் முகத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட மாட்டேன் எனவும் சின்மயி கூறியுள்ளார்.

- Advertisement -

Trending News