ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மும்பையில் செட்டிலான சூர்யா குடும்பம்.. பிரித்விராஜுடன் நடந்த திடீர் சந்திப்பின் காரணம்

சூர்யா இப்போது சென்னையை விட்டு மும்பைக்கு குடி பெயர்ந்திருக்கிறார். அடிக்கடி தொழில் விஷயமாக மும்பைக்கு சென்று வந்த சூர்யா தற்போது தன் குடும்பத்துடன் அங்கேயே செட்டிலாகி இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அவருடைய அப்பா சிவகுமார் ரொம்பவும் கண்டிப்பானவர்.

கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அப்படி இருக்கும் நிலையில் சூர்யா மும்பைக்கு சென்றதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிலும் பாலிவுட்டில் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக தான் அவர் தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம். இது ஒரு புறம் இருக்க சூர்யா கேரளாவுக்கும் அடிக்கடி சென்று வருகிறார்.

Also read: சூர்யா தூக்கி எறிந்த 3 இயக்குனர்கள்.. வளர்த்த கிடா மார்பில் முட்டிய சோகம்

சமீபத்தில் கூட அவர் பிரபல நடிகர் பிரித்விராஜை குடும்பத்துடன் சந்தித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அவர் இயக்கி நடிக்க இருக்கும் ஒரு திரைப்படத்தில் சூர்யாவும் இணைந்துள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தது. அதிலும் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் ஓனர் ராஜன் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றில் அவர் நடிக்கப் போவதாகவும் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டனர்.

ஆனால் சூர்யா கேரளாவுக்கு சென்ற காரணமே வேறு. அதாவது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் ஜோதிகா அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தியிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது மம்முட்டியுடன் இணைந்து காதல் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Also read: சூர்யாவை இயக்கும் பிரித்விராஜ்.. கேட்டாலே தல சுத்துதுல்ல, யாரோட பயோபிக் தெரியுமா.?

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவர் மலையாள சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதன் காரணமாகவே சூர்யா ஜோதிகாவுடன் கேரளாவுக்கு சென்று இருக்கிறார். அங்கு நட்பின் அடிப்படையில் பிரித்விராஜையும் சந்தித்து இருக்கிறார். அந்த போட்டோக்கள் தான் சோசியல் மீடியாவை இப்போது கலக்கி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விஷயம் தெரியாமல் பல யூகங்கள் கிளம்பி கொண்டிருக்கிறது.

இருப்பினும் சூர்யா, ராஜன் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே ஒரு தகவல் உலா வந்தது. அந்த வகையில் இவர்களின் கூட்டணி இணைவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போது அவர்கள் இருவரும் பிசியாக இருக்கும் காரணத்தினால் இந்த முயற்சி சில காலங்களுக்கு பிறகு ஆரம்பிக்கப்படும் என திரையுலகில் அடித்துக் கூறுகின்றனர்.

Also read: சினிமாவுக்கு போடும் அஸ்திவாரம்.. டாப் ஹீரோவுடன் திடீர் மீட்டிங் போட்ட சச்சினின் வைரல் புகைப்படம்

- Advertisement -

Trending News