முத்து படத்திற்கு ஊர்வசியை ரிஜெக்ட் செய்த ரஜினி.. பல வருடம் கழித்து ரகசியத்தை உடைத்த கே எஸ் ரவிக்குமார்

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரும்பாலும் தன்னுடைய படங்களின் முக்கிய முடிவுகளை 90% அவர்தான் எடுப்பார். அது மட்டும் இல்லாமல் படத்தின் வியாபாரத்தில் கூட அவருக்கு பங்கு உண்டு என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.

படத்தில் யார் யார் நடிக்க வேண்டும் என்பதை கூட சில நேரங்களில் சூப்பர் ஸ்டார் தான் முடிவு செய்வாராம். அவருடைய சூப்பர் ஹிட் படமான முத்து படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை சமீபத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்து இருக்கிறார்.

முத்து படம் ரஜினிகாந்திற்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு தான் ஜப்பானில் ரஜினிக்கு இவ்வளவு புகழ் இருக்கிறது என்பதை இந்திய சினிமா தெரிந்து கொண்டது. மீனா, சரத் பாபு, பொன்னம்பலம், செந்தில், வடிவேலு, ராதாரவி, ரகுவரன், விசித்ரா என ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்த படத்தில் நடித்தது.

ரகசியத்தை உடைத்த கே எஸ் ரவிக்குமார்

எஜமான் படத்திற்கு பிறகு ரஜினி மற்றும் மீனாவின் கெமிஸ்ட்ரி தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ரீச் அடைந்தது. இதனால் அடுத்தடுத்து ரஜினி படங்களில் மீனா ஒப்பந்தமானார். முத்து படத்தில் சரத்பாபு ஜோடியாக நடிப்பதற்கு முதலில் கே எஸ் ரவிக்குமார் ஊர்வசியை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

வெள்ளந்தியான கேரக்டர் வேண்டும் என்பதால் அதற்கு ஊர்வசி சரியாக இருப்பார் என ரவிக்குமார் நினைத்திருக்கிறார். ஆனால் உண்மையை சொல்லப்போனால் முத்து படத்தில் அந்த கேரக்டர் தேவையில்லாத ஒன்று எனக் கூட சொல்லலாம்.

பெரிதாக எந்த ஒரு காட்சியும் அந்த கேரக்டருக்கு இருக்காது. ஊர்வசி நன்றாக வளர்ந்து வரும் நடிகை, அவருக்கு நம்முடைய படத்தில் இப்படி ஒரு கேரக்டர் கொடுக்கவே கூடாது என ரஜினி தீர்க்கமாக சொல்லிவிட்டாராம். இதனால்தான் முத்து படத்தில் ஊர்வசி நடிக்கவில்லை.

கேஎஸ் ரவிக்குமாரிடம் பேசியது மட்டுமில்லாமல், ரஜினியின் ஊர்வசிக்கு நேராக போன் செய்திருக்கிறார். அந்த கேரக்டரை பற்றி எடுத்து சொல்லி உங்களைப் போன்ற நல்ல ஆர்ட்டிஸ்ட் இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க வேண்டாம் என ரொம்பவும் தாழ்மையாகவே பேசி கேட்டுக் கொண்டாராம். ஊர்வசியும் சூழ்நிலையை புரிந்து கொண்டு படத்தில் இருந்து விலகி விட்டதாக கே எஸ் ரவிக்குமார் சொல்லி இருக்கிறார்.

முத்து படம் பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள்

- Advertisement -