தனுஷ் இல்ல யார் நினைச்சாலும் தலைவர் பையோபிக் வராது.. ரஜினியே சொன்ன சுவாரஸ்யமான காரணம்

Dhanush in Rajini biopic: அட! யாருப்பா மறுபடியும் இந்த பையோபிக் ட்ரெண்டிங்கை ஆரம்பிச்சதுன்னு சினிமா ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். எல்லாம் நம்ம தனுஷ் பண்ண வேல தான். கொஞ்ச நாள் மறந்து இருந்த இந்த ட்ரெண்டை இளையராஜா படத்தின் மூலம் ஆரம்பிச்சு வச்சுட்டாரு.

இன்னும் கொஞ்ச நாளைக்கு எந்த பக்கம் திரும்பினாலும் பையோபிக் படமா தான் இருக்கும். தனுஷ் நடிக்கிறார் சரி, அதுக்கு ஏன் இளையராஜாவோட பையோபிக்ன்னு சில பேருக்கு தோணும். தனுஷ் சாமி மாதிரி மதிக்கிற ஒரு கேரக்டர் தான் இசைஞானி. அதனால தான் இந்த பையோபிக்.

இளையராஜா கதைன்னா எக்கச்சக்க சர்ச்சை இருக்குமே, எல்லாத்தையும் உண்மையா சொல்வாங்களான்னு ஒரு கேள்வி வரும். அது எப்படிங்க சொல்ல முடியும். எப்படியும் இளையராஜா கஷ்டப்பட்டு மியூசிக் டிராக்டர் ஆகி, முதல் பாட்டு ஹிட் ஆகுறதோட படம் முடிஞ்சிடும்.

தனுஷுக்கு இந்த படம் ரொம்ப பெரிய கனவு. இதுமட்டும் இல்ல, தலைவனுக்கு நம்ம சூப்பர் ஸ்டாரோட பையோபிக்க எடுக்கணும்னு ரொம்ப ஆசையாம். தனுஷ் இந்த ஆசைய சொன்னதும், ச்ச, தனுஷுக்கு தான் முன்னாள் மாமனார் மேல எவ்ளோ பாசம்ன்னு தோணும். இன்னொரு பக்கம் அவரோட முன்னாள் மனைவியை பஞ்சாயத்துக்கு இழுத்துடுவாங்க.

ஆனா இதெல்லாம் வேற பக்கம் இருக்கட்டும். தனுஷ் நினச்சா ரஜினி பையோபிக் எடுக்க முடியுமா, இது தான் ரொம்ப முக்கியம். அதெப்படிங்க முடியும், அவங்க குடும்ப விவகாரம் எல்லாம் தெரியாதானு, நிறைய பேர் சொல்வாங்க.

தனுஷ் நினைச்சாலும் ரஜினி பையோபிக் வராது. ஆனா அதுக்கு காரணம் குடும்ப சங்கதி எல்லாம் இல்ல. தனுஷுன்னு இல்ல, யார் ஆசைப்பட்டாலும் சூப்பர்ஸ்டார் பையோபிக் வர வாய்ப்பே இல்ல. தலைவர் நினச்சா மட்டும் தான் அது சாத்தியம்.

ரஜினியே சொன்ன காரணம்

ஒரு சில வருடங்களுக்கு முன் ஒரு டைரக்டர் ரஜினியிடம் பையோபிக் பற்றி பேசி இருக்கிறார். அதுக்கு ரஜினி பையோபிக்ன்னா எல்லாமே உண்மையா இருக்கனும். நான் என் உண்மை கதையை சொன்னா மக்கள் என்ன வெறுத்துடுவாங்க. அதனால நோ சொல்லிட்டாரு.

இப்போ புரியுதா ஏன் ரஜினிகாந்த் பையோபிக் வராதுன்னு. உண்மைய சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்ன்னு சொல்வாங்க, தலைவர் எங்க போனாலும் உண்மைய தான் பேசுவாரு. இருந்தாலும் அப்படி ஒரு படத்துல, சிவகார்த்திகேயன் இல்லன்னனா தனுஷ் சிவாஜி ராவ் (அதாங்க நம்ம ரஜினி) கேரக்டர்ல ஸ்டைலா பஸ் கண்டக்டரா வரத பாக்க ஆசையா தான் இருக்கு.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்