ஹன்சிகா மார்க்கெட் போனதுக்கே இதான் காரணம்.. கொஞ்சம் அடக்கி வாசிங்க பால் டப்பா

Hansika Motwani: ‘ என்ன கோயம்புத்தூர் பார்ட்டில கூப்டாங்க, பொன்னமராவதி பார்ட்டி ல கூப்பிட்டாங்கன்னு கோவை சரளா, கவுண்டமணியிடம் சொல்வாங்க. அப்படித்தான் நம்ம ஹன்சிகாவின் கதையும் இருக்கிறது. இந்த செய்தியை படிக்கும் போது என்ன! ஹன்சிகா இன்னும் ஃபீல்டுல இருக்காங்களா என எல்லோருக்கும் தோணும்.

ஹன்சிகா இன்னும் ஃபீல்டுல இருக்கிறதா அவங்களே நெனச்சிட்டு இருக்காங்க. பொதுவா நடிகைகளுக்கு கல்யாணம் ஆனா தான் மார்க்கெட் குறையும். ஆனால் ஹன்சிகாவுக்கு மார்க்கெட் குறைந்ததால தான் கல்யாணமே ஆனது. சினிமா வாய்ப்பு கிடைக்காததால் ஓடிடி பக்கம் முயற்சி செய்து பார்த்து பலன் இல்லை.

தன்னுடைய கல்யாண கதையை ஹாட் ஸ்டாரில் டாக்குமெண்டரி ஆக கொடுத்தார். ஆனால் அதற்கும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஹன்சிகாவின் மார்க்கெட் குறைந்ததற்கு அவர் தன்னுடைய எடையை குறைப்பது தான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் உண்மை அது கிடையாது.

ஹன்சிகாவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் தான் அவருக்கு மீண்டும் வாய்ப்பு தர யோசித்தது. எங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழ் சினாய் ரசிகர்களை கவர்ந்த இவர் குஷ்பூ போல் இருப்பதால் அதிக வரவேற்பு இருந்தது. இதனால் ஹன்சிகாவுக்கு கொஞ்சம் மண்டையில் கனமும் அதிகமாகி விட்டது.

ஹன்சிகா மார்க்கெட் போனதுக்கே இதான் காரணம்

ஹன்சிகா பட ப்ரமோஷன்களுக்கு வருவதை தவிர்த்து வந்திருக்கிறார். அதேபோன்று தான் கொடுக்கும் இன்டர்வியூக்களுக்கு இந்த மீடியா வரக்கூடாது, அந்த மீடியா தான் வர வேண்டும் என நிபந்தனைகளும் போட்டு இருக்கிறார். அதேபோல் இந்த கேள்விக்கு தான் பதில் சொல்வேன் என ஓவர் ஆட்டிட்யூட் காட்டி இருக்கிறார்.

இதெல்லாம் மார்க்கெட் இருக்கும் வரை தயாரிப்பாளர்கள் பொறுத்துக் கொண்டார்கள். பட வாய்ப்புகள் சரியத் தொடங்கிய நேரத்திலும் குட்டி குஷ்பூ இந்த வேலையை தான் பார்த்திருக்கிறார். இதனால் தான் அவருக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது.

ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் கார்டியன். இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. வாய்ப்பில்லாத நேரத்தில் வாலை சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என அவருக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை போல. எப்பவும் போல தயாரிப்பாளரிடம் ஓவர் அல்டாப் காட்டி இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்