ரஜினியை மிரள விட்ட வடிவுக்கரசியின் நிஜ வாழ்க்கை.. சொல்ல முடியாத மன வேதனையில் இருக்கும் வில்லி

தமிழ் சினிமாவில் குணசித்திர கேரக்டர் மற்றும் வில்லியாகவும் தனது முத்திரை பதித்த நடிகை தான் வடிவுக்கரசி. அதிலும் அருணாச்சலம்  படத்தில் ரஜினிக்கு பாட்டியாக வந்து இவருடைய நடிப்பால் மிரள விட்டிருப்பார். பொதுவாக இவருடைய படங்களில் இவருக்கு கிடைக்கும் வாய்ப்பு வில்லியாக தான் இருக்கும்.

இதைத் தொடர்ந்து இவர் சின்னத்திரையிலும் முத்திரை பதித்த பொழுது வில்லி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தக் கூடியவராக இவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஆனாலும் என்னதான் வில்லியாக நடித்திருந்தாலும் இவருடைய நிஜ வாழ்க்கையில் சொல்ல முடியாத அளவிற்கு மன வேதனையில் இருந்து தவித்திருக்கிறார்.

Also read: சந்திரமுகி 2 படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

அதாவது இவருடைய திருமணத்திற்கு பின் கொஞ்ச நாட்களிலேயே இவருடைய கணவர் இவரை விட்டுவிட்டு அவருடைய சொந்த ஊரில் மறு திருமணம் செய்து கொண்டார். இதை தெரிந்த பிறகு என்னடா நம்முடைய கல்யாண வாழ்க்கை இவ்வளவு கேள்விக்குறியாக போய்விட்டது. நாம் ஏமாந்துட்டோமா அல்லது நம்மள இப்படி ஏமாத்திட்டாங்களா என்று அந்த நேரத்தில் ஒன்னும் புரியாமல் மிகவும் குழப்பத்தில் இருந்திருக்கிறார்.

அப்பொழுது இவரும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். பிறகு இவரை விட்டுப் போன கணவருக்கு அந்த மனைவியுடன் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதன்பின் அவர்களுக்கு இருந்த சில பிரச்சனையின் காரணமாக அந்த குழந்தையை ஆசிரமத்தில் விட்டு விட்டார். இதை தெரிந்த வடிவுக்கரசி அந்த குழந்தையை தத்து எடுத்திருக்கிறார்.

Also read: வடிவுக்கரசியால் செருப்பாலேயே அடித்து கொண்ட இயக்குனர்.. கால வாரி விட்டதால் வந்த வினை

அந்த குழந்தையை தன்னுடைய குழந்தையாகவே பாவித்து படிக்க வைப்பதில் இருந்து எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார். அதற்குக் காரணம் என்ன தான் கணவர் விட்டுட்டு போனாலும் அந்த குழந்தை என்ன பாவம் பண்ணியது அதனால் மனசு கேட்காமல் அந்த குழந்தையிடம் தாய் உள்ளமாக இருந்திருக்கிறார்.

இப்பொழுது அந்த மகள் வெளிநாட்டில் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிட்டது. ஆனாலும் அந்த மகளுக்கு வடிவுக்கரசி தான் அம்மா என்று நினைப்பு மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதனால் இந்தியாவிற்கு வரும்பொழுதெல்லாம் இவரை பார்த்துவிட்டு அதன் பிறகு தான் மற்ற எந்த வேலையும் செய்யக்கூடிய அளவிற்கு எங்களுடைய பாசம் இருக்கிறது என்று மிகவும் கண்கலங்கி இவருடைய தாய் உள்ளத்தை பகிர்ந்து வருகிறார்.

Also read: வடிவுக்கரசி தேளாய் கொட்டிய 8 படங்கள்.. சிவாஜிக்கே தண்ணிகாட்டிய சூப்பர் ஹிட் படம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்