அரைகுறை ஆடையில் போட்டோ சூட் நடத்தும் குத்துவிளக்கு.. இயக்குனரை நம்பி மோசம் போனதால் வந்த வினை

சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகைக்கு விருது இயக்குனரின் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த அதிர்ஷ்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்ட அந்த இளம் நடிகையும் இயக்குனர் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டி நடித்தார்.

முதல் படத்திலேயே இப்படி ஒரு பிரச்சனைக்குரிய வேடத்தில் நடிகை நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பிரமோஷன் என்ற பெயரில் நடிகை லூஸ் டாக் விட்டதும் அவருக்கே ஆப்பாக முடிந்தது. இதனால் நொந்து போன நடிகை பகிரங்க மன்னிப்பும் கேட்டார்.

Also read: கிளுகிளுப்பாக எழுதப்பட்ட 6 பாடல்கள்.. அதிர்ந்து போய் சென்சார் போட்டு கட் செய்த வரிகள்

இப்படி ஒரு வழியாக பிரச்சனையை முடித்து விட்ட நடிகை தன் முதல் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் க்யூ கட்டி நிற்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நடிகையின் அந்த ஒரு காட்சி அவருக்கே பின்னடைவாக மாறிவிட்டது. அதன் விளைவாக இப்போது அந்த நடிகை ஒரு கிளாமர் குயினாக மாறி இருக்கிறார்.

ஹோம்லி லுக்கில் அனைவரையும் கவர்ந்த அந்த நடிகை இப்போது தன் சோசியல் மீடியா பக்கத்தில் அரைகுறை உடையில் போட்டோக்களை பதிவிட்டு வருவதை பார்த்த பலரும் ஷாக்காகி வருகின்றனர். வாய்ப்புக்காக இந்த அளவுக்கு இறங்கி விட்டாரே என சிலர் நடிகையை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அதிலும் முக்கியமாக நடிகையின் பெற்றோர்கள் மனசொடிந்து போயிருக்கிறார்களாம். அந்த இயக்குனர் படம் பற்றி கூறிய போது நடிக்க வேண்டாம் என்று தலை தலையாய் அடித்துக் கொண்ட அவர்கள் இப்போது மகளின் சினிமா வாழ்வை நினைத்து பதட்டத்தில் இருக்கிறார்களாம். மேலும் நடிகை இப்படி போட்டோ சூட் நடத்தியும் வாய்ப்பு கிடைக்காத வருத்தத்தில் அக்கம் பக்கம் புலம்பிக் கொண்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கிறாராம்.

Also read: அம்மாவுடன் இருந்த கள்ள உறவு, திருமணத்திற்கு பின் தெரிந்த உண்மை.. இயக்குனரை நம்பி மோசம் போன 16 வயது நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்