சோம பானத்தால் சிக்கிய விஜய் ஆண்டனி.. ஜீசஸை அவமதித்ததால் கிளம்பிய எதிர்ப்பு

Actor Vijay Antony: விஜய் ஆண்டனி கைவசம் தற்போது பல படங்கள் இருக்கிறது. அதில் பிசியாக நடித்து வரும் இவர் ஜீசஸை அவமதித்து விட்டதாக ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.

ரோமியோ படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அதன் பிரமோஷனில் பிஸியாக இருக்கிறார். அப்போது இவர் பேசிய பேச்சு தான் தற்போது கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது.

அதாவது இப்பட போஸ்டரில் ஹீரோயின் கையில் பாட்டிலோடு இருப்பது போல் இருந்தது. இது பற்றி செய்தியாளர்கள் பெண்கள் குடிக்கலாமா? என அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு விஜய் ஆண்டனி ஆணும் பெண்ணும் சமம் என்று கிண்டலாக சொன்னார். அப்படி என்றால் இதை ஆதரிக்கிறீர்களா? என செய்தியாளர்கள் விடாமல் கேள்வி கேட்டனர்.

இயேசு கிறிஸ்துவை அவமதித்த விஜய் ஆண்டனி

உடனே அவர் ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான். அந்த காலத்தில் திராட்சை ரசம் என்ற பெயரில் இது இருந்தது. ஜீசஸ் கூட குடிச்சிருக்கார். ராஜா காலத்தில் இதை சோம பானம் என்று அழைத்தார்கள்.

இப்படி அக்காலத்தில் இருந்து இது வெவ்வேறு பெயர்களில் இருந்திருக்கிறது என பதில் அளித்தார். இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விஜய் ஆண்டனி இயேசு கிறிஸ்துவை இழிவுபடுத்தும் விதமாக பேசியிருக்கிறார். இதனால் கிறிஸ்தவ மக்கள் மனம் புண்பட்டிருக்கிறது. இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லை என்றால் அவர் வீட்டில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வோம் என தெரிவித்துள்ளனர். பிரமோஷனுக்காக எதையோ பேச போய் பிரச்சனையில் சிக்கிய விஜய் ஆண்டனி இதற்கு என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை