வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ரெட் ஜெயன்ட்டுக்கு எதிராக 4 வருட பிரச்சனையை கிளப்பிய தயாரிப்பாளர்.. வக்காலத்து வாங்கும் சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர் என்றால் தெரியாத இணையதள வாசிகளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அரசியல்வாதிகள் மற்றும் மத்திய, மாநில அரசியலுக்கு எதிராக பல கருத்துக்களை கூறுபவர் தான் இவர். இதற்காக பல சர்ச்சைகளிலும் அவர் சிக்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சினிமாவில் நடக்கும் சில அரசியல்களைப் பற்றியும் இவர் பேசி வருகிறார்.

அதிலும் உதயநிதி ஸ்டாலின் பற்றியும் அவருடைய ரெட் ஜெயன்ட் நிறுவனம் பற்றியும் பல விமர்சனங்களை இவர் முன் வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட சட்ட ரீதியான ஒரு பிரச்சனையையும் இவர் கிளப்பியிருந்தார். அதன் காரணமாகவே இவர் எப்போதும் ஒரு பரபரப்பு வட்டத்திற்குள் தான் இருப்பார். இந்நிலையில் அவர் உதயநிதிக்கு ஆதரவாக ஒரு கருத்தை பகிர்ந்துள்ளது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

Also read: எல்லா கொலைகளுக்கு பின் அழுத்தமான காரணம் இருக்கும்.. மிரட்டும் உதயநிதியின் கண்ணை நம்பாதே ட்ரெய்லர்

அதாவது தயாரிப்பாளர் ராம சரவணன் தற்போது உதயநிதிக்கு எதிராக ஒரு பிரச்சனையை கிளப்பி இருக்கிறார். என்னவென்றால் கடந்த 2018 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஏஞ்சல் என்ற திரைப்படத்தை அவர் தயாரித்தார். ஆனால் அந்த படம் சில காரணங்களால் இன்னும் முடியாமல் இருக்கிறது. அதனால் உதயநிதி 8 நாட்கள் கால்சூட் கொடுத்தால் மட்டும் போதும் படம் முடிந்து விடும் என்று அவரிடம் கேட்டு இருக்கிறார்.

ஆனால் அதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதனால் தற்போது அவர் நீண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டு உதயநிதியிடம் உதவி கேட்டு இருக்கிறார். அதில் தயாரிப்பு குழுவின் வலி உங்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் உங்களின் துரிதமான செயல் முடிவு தேவைப்படுகிறது. உண்மையான ஹீரோவாக நீங்கள் படகுழுவை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also read: உதயநிதியை வைத்து ஏகே 62 படத்தில் வாய்ப்பு பெற்ற ஹீரோ.. அருண் விஜய்க்கு போட்டியாக இறங்கும் நடிகர்

இதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சவுக்கு சங்கர் இந்த பிரச்சனையில் உதயநிதி மேல் எந்த தவறும் கிடையாது என தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் ராமசரவணன் பணத்திற்காக தான் இப்படி ஒரு பிரச்சனையை கிளப்புவதாகவும் நான் உள்பட சிலரிடமும் அவர் உதயநிதிக்கு எதிராக பேசும் படி கேட்டார் என்றும் கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

அதன் பிறகு அவரைப் பற்றி விசாரித்ததில் அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என எனக்கு தெரிந்தது. அதனால் உதயநிதி மீது எந்த தவறும் இல்லை என வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறார். இதுதான் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கிளப்பி இருக்கிறது. மேலும் இவ்வளவு நாட்கள் உதயநிதிக்கு எதிராக பேசிய சவுக்கு சங்கர் இப்படி திடீரென அந்த பல்டி அடித்து சப்போர்ட் செய்திருப்பது சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Also read: மாபியா கும்பலுக்கு முடிவு கட்டின உதயநிதி.. நம்ம நினைச்சது பொய்யா? அடுத்த கட்டத்தில் ரெட் ஜெயண்ட்

- Advertisement -

Trending News