உனக்கு என்ன தெரியும், ஓரமா போ.. சென்ட்ராயனை மேடையில் அவமானப்படுத்திய தயாரிப்பாளர்

வில்லன், காமெடி போன்ற கேரக்டர்களில் நடித்து வரும் நடிகர் சென்ட்ராயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவர் கடைசியாக கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் ஒரு பட விழாவில் கலந்து கொண்ட போது தயாரிப்பாளரால் அவமானப்படுத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எப்போது மை கிடைக்கும் கண்டபடி பேசலாம் என்று காத்திருக்கும் நபர்களில் முக்கியமானவர் தான் தயாரிப்பாளர் ராஜன்.

Also read : தம்பிகளுக்காக ஹீரோ தியாகம் செய்து நடித்த 5 படங்கள்.. சென்டிமென்டில் அசத்திய ரஜினி

டபுள்ஸ் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் இப்போது வரை நான் ஒரு பெரிய தயாரிப்பாளர் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு பட விழாவில் இவர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் வழக்கம் போல தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றும், நடிகர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள் என்றும் கண்டபடி உளறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மேடையில் இருந்த சென்ட்ராயன் அவரிடம் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் எங்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறினார்.

Also read : பாடலை மட்டுமே வைத்து ஹிட்டித்த ராமராஜனின் 4 படங்கள்.. இளையராஜா வளர்த்துவிட்ட ஹீரோ

இதனால் கடுப்பான கே ராஜன் உனக்கு என்ன தெரியும் தயாரிப்பாளர்களின் கஷ்டம் பற்றி, ஓரமா போய் உட்காரு என்று மிகுந்த ஆத்திரத்துடன் ஆவேசமாக அவரை பிடித்து தள்ளினார். இது அங்கிருந்த ஒட்டுமொத்த நபர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இருப்பினும் சென்ட்ராயன் அதை சமாளித்தபடி சென்றார்.

மேலும் பேசிய கே ராஜன் வாயா, போயா என்றெல்லாம் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். அப்போது மேடையில் இயக்குனர் செல்வமணி உள்ளிட்ட பிரபலங்களும் இருந்தார்கள். பதிலுக்கு பேசு சென்ற சென்ட்ராயனை அவர்கள் சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.

அதன் பிறகு கே ராஜன் எதற்கு இந்த விழாவிற்கு வந்தோம் என்பதையே மறந்து விட்டு நடிகர்களை குறை சொல்லி பேசிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வு தான் தற்போது ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது. மைக் கிடைக்கிறதே என்று இஷ்டத்துக்கு பேசும் தயாரிப்பாளர் ராஜனை அவர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.

Also read : தொடர்ந்து சரியும் நயன்தாராவின் மார்க்கெட்.. விக்கியால் சினிமாவுக்கு முழுக்கு போடும் நிலை