300 கோடி வசூல் செய்தும் விஜய்யை சந்தி சிரிக்க வைத்த தயாரிப்பாளர்.. இப்படியா அவமானப்படுத்துவது?

பொதுவாக விஜய், அஜித் படங்களை இயக்க தயாரிப்பாளர்கள் காத்து கிடைக்கின்றனர். ஏனென்றால் இவர்கள் படம் எப்படியுமே நல்ல வசூலை பெற்றுவிடும். அதனால் பெரிய தயாரிப்பாளர்கள் விஜய், அஜித்தின் கால்ஷீட் கிடைக்காதா என்று காத்துக் கிடக்கிறார்கள். அப்படி ஒரு தயாரிப்பாளர் விஜய் வைத்து நல்ல லாபம் பார்த்துவிட்டு இப்போது அவமானப்படுத்தி உள்ளார்.

தெலுங்கு இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு கூட்டணியில் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வாரிசு படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விஜய்க்காகவே திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Also Read : ரஜினி, விஜய்க்காக நடக்கும் போர்.. இணையத்தையே அல்லோலப்படுத்தும் மட்டமான செயல்

அதுமட்டுமின்றி வாரிசு படம் வெளியான 50 நாட்களிலேயே 300 கோடியை தாண்டி வசூல் செய்தது. மேலும் ஓடிடியில் வெளியான பிறகும் திரையரங்குகளில் வாரிசு படம் சக்கைபோடு போட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் விஜய் என்ற பிராண்ட் மட்டும் தான். தளபதிக்காக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடிய தீர்த்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் வைத்து நல்ல லாபம் பார்த்த நிலையில் இப்போது அவரை சந்தி சிரிக்க வைத்துள்ளார். அதாவது வாரிசு படம் வெளியாவதற்கு முன்பு விஜய் தலையில் தூக்கி வைத்து பேசிய தில் ராஜு இப்போது அப்படியே பல்டி அடித்துள்ளார். அதாவது இவர் தயாரிப்பில் பாலகம் என்ற படம் உருவாகியுள்ளது.

Also Read : செக் இல்ல பணப்பெட்டியோடு வந்தா பாருங்க.. அஜித், விஜய்யை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கஜானாவை நிரப்பும் நடிகர்

இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தில் ராஜு இப்படத்தில் ஃபைட் இல்ல, டான்ஸ் இல்ல, விஜய்யின் பாடி லாங்குவேஜ் இருக்காது மொத்தத்தில் படம் சூப்பர் என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் என்று கிண்டலாக பேசியுள்ளார். இவரது பேச்சைக் கேட்டு தெலுங்கு ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

ஆரம்பத்தில் அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் என்றும், வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என்று பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்துகின்றது. இப்போது தான் தயாரித்துள்ள படத்திற்காக வாரிசு படத்தையும், தளபதியையும் தில் ராஜு ஏளனமாக பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

பயன்படுத்தும் வரை நன்றாக பயன்படுத்திவிட்டு அதன் பின்பு பேப்பரை தூக்கி எறிவது போல விஜய்யை இவ்வாறு உதாசீனப்படுத்தி கேலி செய்து தில் ராஜு பேசியுள்ளார். தெலுங்கு சினிமாவை நம்பி விஜய் போனதற்கு தில் ராஜு நன்றாக வைத்து செய்துள்ளார் என சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Also Read : கில்லி படத்தை போல் பிரகாஷ்ராஜுடன் கபடி ஆடிய விஜய்.. இணையத்தில் ட்ரெண்டாகும் வாரிசு நீக்கப்பட்ட காட்சி