ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அட்லீயை வச்சு செய்த தயாரிப்பாளர்.. கைதட்டி சிரித்த சிறுத்தை சிவா

இயக்குனர் அட்லீ இப்போது பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். ஷாருக்கானின் பதான் வெற்றியைத் தொடர்ந்து ஜவான் படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அட்லீயை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வசைபாடி உள்ளார். இதற்கு பலரும் கைதட்டி சிரித்தது தான் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதாவது மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் காசேதான் கடவுளடா என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது.

Also Read : அட்லீயை அசிங்கப்படுத்திய கமல்.. விஜய் காதுக்கு சென்ற விஷயத்தால் இன்று வரை இருக்கும் வெறுப்பு

இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் அட்லீயை பற்றி மோசமாக விமர்சித்திருந்தார். அதாவது விஜய் நடிப்பில் அட்லீ பிகில் படம் எடுத்திருந்தார். இந்த படம் பாலிவுட்டில் வெளியான ஷாருக்கானின் சக் தே இந்தியா படத்தின் காப்பி தான்.

அந்தப் படத்தில் ஹாக்கியை வைத்து எடுத்து இருப்பார்கள், அதுவே அட்லீ ஃபுட்பாலாக மாற்றி எடுத்திருந்தார். மேலும் ஹிந்தியில் எதார்த்தமான காட்சிகளாக எடுத்து இருப்பார்கள். ஆனால் தமிழில் 10 ஃபைட், அஞ்சு பாட்டு, இல்லைனா பொம்பளைங்க இடுப்ப புடிக்கிற மாதிரி டான்ஸ் என்று எடுத்துள்ளார்கள் என கிழித்து தொங்கவிட்டுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன்.

Also Read : அட்லீ மேல் விழுந்த மொத்த பழி.. பதான் செய்த வேலையால் டார்ச்சர் கொடுக்கும் ஷாருக்கான்!

மேலும் பிகில் படத்தை தயாரித்தது பெரிய நிறுவனம் என்பதால் சமாளித்தது. அதுமட்டுமின்றி இப்படி ஒரு படத்தை எடுத்து விட்டு 30 கோடி சம்பளம் அது தவிர கமிஷன் என வாங்கி படக்குழுவை ஏமாற்றி விட்டார். ஆனாலும் படம் ஃபெயிலியர் தான் ஆனது. இப்படி சம்பாதித்த பணம் எப்படி ஓட்டும்.

அதனால் தான் அவர் குடியிருந்த வீட்டை விட்டார் என கேலி, கிண்டலுடன் கே ராஜன் பேசியிருந்தார். இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தது மட்டுமல்லாமல் இயக்குனர் சிறுத்தை சிவாவும் கைதட்டி சிரித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு இயக்குனரை விமர்சிக்க போது இப்படியா சிரிப்பது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read : விஜய்யை கைகழுவி விட்ட அட்லீ.. வேறு ஹீரோவுக்கு வலை வீசிய ஜவான் படக்குழு

- Advertisement -

Trending News