வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய்க்கு மொத்த பினாமியாக இருக்கும் தயாரிப்பாளர்.. கமுக்கமாக இருந்து காய் நகர்த்தும் விசுவாசி

Actor Vijay: என்னதான் பெரிய நடிகர்களாக இருந்தாலும் எல்லா விஷயத்திலும் அவர்களால் கவனம் செலுத்த முடியாது. அதாவது நடிப்பது மட்டும்தான் தன்னுடைய வேலை என்று அதில் மட்டுமே அவர்களுடைய முழு கவனத்தையும் செலுத்தி லாபம் பார்த்து வருகிறார்கள். அப்படி அவர்கள் சேர்த்து வைத்த மொத்த சொத்தை பாதுகாக்கும் பொறுப்பை நம்பிக்கையான ஒருவரிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

அப்படித்தான் விஜய்யும் அவருடைய மொத்த சொத்துக்கும் பினாமியாக தயாரிப்பாளர் ஒருவரை வைத்திருக்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ அதுபடியே விஜய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார். இன்னும் சொல்ல போனால் இந்த விஷயத்தில் விஜய் அவரை கண்மூடித்தனமாகவே நம்பி எல்லா பொறுப்பையும் ஒப்படைத்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

அவர் வேறு யாருமில்லை தயாரிப்பாளர் லலித். இவர்தான் விஜய்க்கு லெப்ட் அண்ட் ரைட் ஆக எல்லா விஷயமும் இருந்து சொத்துக்களை பராமரித்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் விஜய்க்கு கிட்டத்தட்ட 7-8 கல்யாண மண்டபங்கள் இருக்கிறது. அத்துடன் சென்னையில் மொத்தம் எட்டு வீடுகள் இருக்கிறது.

இது போக ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களிலும் ஏகப்பட்ட பிராப்பர்ட்டிகளை வைத்திருக்கிறார். இது அனைத்தையும் நிர்வாகிக்கும் பொறுப்பில் தான் லலித் இருக்கிறார். அந்த வகையில் விஜய்யிடம் இருந்து கல்யாண மண்டபத்தை லீஸ் எடுத்து அதில் லாபம் பார்த்து வருகிறார் லலித்.

இதெல்லாம் போக விஜய் படங்களையும் தயாரித்து தயாரிப்பாளராக வலம் வருகிறார். இப்படி விஜய்யுடனே இருந்து பல வழிகளில் கமுக்கமாக லாபத்தை பார்த்து சம்பாதிக்கிறார். அத்துடன் விஜய் சொத்து அனைத்திற்கும் மொத்த பினாமியாகவும் இருந்து அனைத்து பொறுப்புகளையும் எடுத்து நிர்வாகித்து வருகிறார்.

அந்த வகையில் விஜய்க்கும் லலித்க்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் லியோ படத்தில் எப்படியும் ஆயிரம் கோடி வசூலை தொட்டுவிடும் என்பதனாலேயே இப்படத்தின் உரிமையை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் லலித் அவரை எடுத்து வருகிறார். இதுக்கு முழுக்க முழுக்க விஜய்யின் சப்போர்ட் இருப்பதினால் மட்டுமே லலித் இந்த அளவிற்கு முடிவெடுத்திருக்கிறார்.

- Advertisement -

Trending News