அட்வான்ஸை திருப்பி வாங்கிய தயாரிப்பாளர்.. விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட அவமானம்

விஜய் சேதுபதி இப்போது ஹீரோவை காட்டிலும் வில்லனாக பல படங்களில் நடித்து வருகிறார். சில ஹீரோக்கள் தங்களுக்கு உள்ள அந்தஸ்தை விட்டு இறங்க மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் வில்லனாக தொடர்ந்து நடித்து வருகிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதி மிரட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து இப்போது லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

Also Read : நாசுக்காக தூண்டில் போட்ட நயன்தாரா.. இயக்குனருக்கு அல்வா கொடுத்த விஜய் சேதுபதி

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற ஒரு செய்தி இணையத்தில் பரவலாக பேசப்பட்ட வருகிறது. ஏற்கனவே படத்தில் ஆறு ஏழு வில்லன்கள் நடிக்கும் நிலையில் விஜய் சேதுபதியும் வில்லனாக நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து இப்போது ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது விஜய் சேதுபதி ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் பெற்றிருந்தாராம். ஆனால் தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் விஜய் சேதுபதி இடையே நீண்ட காலமாக மனக்கசப்பு இருந்துள்ளது. இதனால் விஜய் சேதுபதியின் ஆபீசுக்கு நேரடியாக சென்று கொடுத்த அட்வான்ஸ் திருப்பி வாங்கி உள்ளாராம்.

Also Read : விஜய் சேதுபதி நாற்காலியை தூக்கிய ஹீரோ.. உல்டாவாக தம்பி போனதும் காலியான திண்ணையை பிடித்த அண்ணன்

மேலும் லலித் மற்றும் விஜய் சேதுபதி இடையே துக்ளக் தர்பார் படத்திலிருந்து பிரச்சனை இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது. ஆனாலும் படத்தில் ஒப்பந்தமான பின்பு அட்வான்ஸை திருப்பி வாங்கியது விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது.

விஜய் மற்றும் லலித் இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஆனாலும் விஜய் சேதுபதி லியோ படத்தில் இருந்து துக்கப்பட்டதற்கு விஜய் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் விஜய் சேதுபதி பாலிவுட்டில் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

Also Read : பறிப்போகும் மக்கள் செல்வன் பட்டம்.. மிமிக்ரி ஆர்டிஸ்ட்க்கு வாய்ப்புக்கொடுத்த பாவத்திற்கு அனுபவிக்கும் விஜய் சேதுபதி

- Advertisement -