வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஓடாத படத்துக்கு இவ்வளவு அலப்பறையா.. தயாரிப்பாளரை அதல பாதாளத்தில் தள்ளிய பிரபுதேவா

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவர் பிரபுதேவா. சமீபகாலமாக படங்களை இயக்குவதை காட்டிலும் நடிப்பில் தான் பிரபுதேவா கவனம் செலுத்தி வருகிறார். அதாவது கடைசியாக பிரபுதேவா 2021இல் சல்மான்கானை வைத்து ராதே என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் 120 கோடி செலவில் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் படம் வெளியாகி 20 கோடி மட்டுமே வசூல் செய்து மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் படத்தை இயக்குவதை பிரபுதேவா கைவிட்டார். இந்நிலையில் எக்கச்சக்க படங்களில் பிரபுதேவா நடித்து வருகிறார்.

அதாவது பகீரா, ஜின்னா, லக்கிமேன், ஊமைவிழிகள், ஃப்ளாஷ் பேக் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அண்மையில் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த பொய்க்கால் குதிரை படம் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் பிரபுதேவா ஒரு படத்திற்கு 4 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

தற்போது அவருடைய பொய்க்கால் குதிரை படம் வெளியாகி படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது இப்படத்தின் மொத்த வசூல் 20 லட்சம் மட்டும்தானாம். பிரபுதேவாவின் அடுத்தடுத்த படங்கள் இவ்வாறு மோசமான தோல்வி அடைந்தாலும் அவர் மட்டும் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

தயாரிப்பாளர்கள் பிரபுதேவாவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்தும் படம் வெற்றி பெறவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனராம். அதுமட்டுமல்லாமல் போட்ட காசையே எடுக்கமுடியாமல் படம் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்திக்கிறது. இதனால் பிரபுதேவாவை வைத்து படம் இயக்கிய தயாரிப்பாளர்கள் அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பெரிய நிறுவனங்களே பிரபுதேவாவின் படத்தை தயாரிக்க தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். பிரபுதேவா நடிப்பதை கைவிட்டு நடனத்தில் ஆர்வம் செலுத்தலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News