சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

1000 கோடி வசூலுக்கு வாய்ப்பே இல்லை.. லியோ தயாரிப்பாளர் கூறிய அதிர்ச்சி காரணம்

leo-vijayVijay-Leo: விஜய் லியோ படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் பாதி அருமையாக அமைந்தாலும் இரண்டாம் பாதி எதிர்பார்த்த அளவு இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறார்கள். ஆனாலும் முதல் நாள் வசூல் தயாரிப்பாளரை லியோ படம் கைவிடவில்லை.

அந்த வகையில் லியோ படம் முதல் நாள் வசூலில் உலகம் முழுவதும் சுமார் 148 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக முதல் நாளே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை லியோ படம் பெற்றிருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.

அதில் 1000 கோடி லியோ படம் வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என்பது போல கூறியிருக்கிறார். அதாவது பாலிவுட்டில் லியோ படம் பெரிய வசூலை எதிர்பார்க்கவில்லை. ஆகையால் ஆயிரம் கோடி வசூலை எட்டாது என்று லலித் கூறியுள்ளார். இதுவரை லியோ படம் எப்படியும் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் நினைப்பில் மண்ணள்ளி போடும் விதமாக தயாரிப்பாளர் லலித்தே இந்த விஷயத்தை சொல்லி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் லியோ படத்திற்காக தமிழகத்தில் 4 மணி காட்சி ஒளிபரப்ப வேண்டும் என்று முயன்று முடியாமல் போய்விட்டது. இந்த விஷயம் விஜய்க்கு தெரிந்ததும் தன்னை போனில் அழைத்ததாக லலித் கூறியிருந்தார்.

அதாவது லியோ படத்திற்கு நான்கு மணி காட்சி கேட்டு ஏன் கோர்ட்டுக்கு போனீர்கள் என்று திட்டினாராம். அதாவது எப்போதுமே அரசு ஒரு விதிமுறையை கடைபிடிக்கும் போது அதற்கு எதிராக செயல்படக்கூடாது என்று விஜய் கூறினாராம். மேலும் இது தமிழகத்தில் நடக்கவில்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் நான்கு மணி காட்சிகள் லியோ படத்திற்கு கிடைத்திருக்கிறது.

மேலும் லியோ படத்தின் முதல் நாள் வசூல் மூலம் விஜய் சாதனை படைத்துள்ள நிலையில் இப்போது அதே வீச்சுடன் தளபதி 68 படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஆகையால் லியோ படத்தில் கிடைத்த சிறு ஏமாற்றம் தளபதி 68 படத்தின் மூலம் விஜய் பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

- Advertisement -

Trending News