மாவீரன் படத்திற்கும் வந்த சிக்கல்.. சிவகார்த்திகேயனை துரத்தும் துரதிருஷ்டம்

டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த ப்ராஜெக்டுகளில் பிசியாக இருக்கிறார். ஆனால் அவரின் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் உருவான அயலான் திரைப்படம் இன்னும் சிக்கலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் சிவகார்த்திகேயன் இறங்கி வேலை செய்யும் மனிதர். அதனாலேயோ என்னமோ மனுசனுக்கு அடுத்தடுத்து பிரச்சனை. சினிமாவில் பல அடிகளை பெற்று முன்னேறியவர். சிவகார்த்திகேயரின் எஸ்கே புரோடக்சனில் கண்ணும் கருத்துமாய் ஒவ்வொரு வேலையையும் பார்த்து செய்பவருக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.

இப்பொழுது பிரச்சனைகளில் இருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டு எல்லாவற்றையும் ஒழுங்காக செயல்படுத்தி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் மாவீரன். இந்தப் படத்தை இயக்குனர் மண்டேலா பட இயக்குநர் அஸ்வின் மடோனா இயக்குகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க ஒப்பந்தமானார். மூன்று நாட்கள் மட்டுமே சூட்டிங் நடைபெற்றது. இப்பொழுது பணப் பிரச்சினை காரணமாக அந்த படம் நின்றுவிட்டது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில்  பல வருடங்களுக்கு முன் உருவான அயலான் திரைப்படத்தை ஆர் டி ராஜா தயாரித்திருந்தார்.

ஆர் டி ராஜா உடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு இந்தப் படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் அவர் பைனான்சியர்களிடம் பணத்தை கடனாக பெற்று தான் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

அதன் காரணமாக இந்த படத்தை எப்படியாவது விரைவில் வெளியிட வேண்டும் என்று அவர் திட்டமிட்டுள்ளார். அயலான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படமான மாவீரன் படத்திருக்கும் அதே பிரச்சனை ஏற்பட்டிருப்பதால், நாலா பக்கமும்பிரச்சினைகள் துரத்தும் துரதிர்ஷ்டசாலியாக இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்