சென்சாரால் மீண்டும் துணிவுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. வசூலுக்கு வச்ச பெரிய ஆப்பு

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஜித்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாது முழுக்க முழுக்க மோசமான வில்லனாக இந்த படத்தில் அஜித் நடித்துள்ளார். ஆகையால் இதில் அஜித்தின் கேரக்டரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தமிழ் சினிமாவில் கண்டிப்பாக அஜித்தின் படம் வசூலை வாரி குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இப்போது வெளிநாடுகளில் வசூலை குவிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது துணிவு படத்தில் நிறைய இடங்களில் அஜித் கெட்ட வார்த்தை பேசி உள்ளார்.

Also Read : வேகமெடுக்கும் பொங்கல் ரேஸ்.. வாரிசு, துணிவு ப்ரீ பிசினஸ் இன்றைய நிலவரம்

ஆகையால் துணிவு படம் சென்சாரில் சிக்கி உள்ளது. அதாவது ஒரு படம் சென்சாருக்கு அனுப்பப்படும் போது அது தரம் குறித்து ஆராய்ந்து அதற்கான சர்டிபிகேட்டை வழங்கும். அந்த வகையில் துணிவு படம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களில் பெரும் சிக்கலை சந்திக்க உள்ளது.

துணிவு படத்திற்கு சிங்கப்பூரில் என்சி16 என்ற சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் சிங்கப்பூரில் துணிவு படத்தை 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க முடியாது. இதனால் குடும்பமாக சிங்கப்பூரில் துணிவு படத்தை பார்ப்பது கஷ்டம். எனவே அங்கு வசூல் பெருத்தடி வாங்க உள்ளது.

Also Read : நெகட்டிவ் விமர்சனங்களுக்கு வேற லெவல் பதிலடி கொடுத்த அஜித்.. துணிவு பிரிவியூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

அதேபோல் மலேசியாவில் இந்த படத்திற்கு எஸ்ஜி18 என்ற சர்டிபிகேட் கொடுத்துள்ளது. அப்படி என்றால் இந்தியாவில் கொடுக்கப்படும் ஏ சர்டிபிகேட்டுக்கு சமமான படமாகும். அதாவது அடல்ட் மூவியாக 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்கும் படமாக சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் படத்திற்கு இப்படி ஒரு சர்டிபிகேட் கொடுத்தது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் துணிவு படத்தின் வசூல் கோடிகளை குவித்தாலும், வெளிநாடுகளில் வாரிசு படம் தான் வசூல் வேட்டையாடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read : முதல் நாள் புக்கிங் வசூல் விவரம்.. துணிவுடன் சொன்ன கணிப்பை தவுடு பொடியாக்கியதா வாரிசு.?

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -