லோகேஷ் நண்பரால் சிவகார்த்திகேயனுக்கு வந்த பிரச்சனை.. இப்படி SK-வை அசிங்கப்படுத்த என்ன காரணம்!

டாக்டர், டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால், பெரும் வருத்தத்தில் இருக்கிறார். இதனால் விட்டதை பிடிக்க வேண்டும் என்று அடுத்ததாக இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் எடிட்டராக வேலை செய்த லோகேஷின் நண்பர் சிவகார்த்திகேயனை நல்லா வச்சு செய்து விட்டார்.

Also Read: பட வாய்ப்புக்காக நரி தந்திரமாக செயல்பட்ட சிவகார்த்திகேயன்.. ஒரே படத்தில் உச்சத்தை தொற்றலாம்னு நினைப்பு

மாவீரன் படத்தில் பல பிரச்சனைகள் இருந்து வந்தது. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் மீண்டும் தொடங்கப்பட்டது. இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பல பிரச்சினைகள் இருப்பதால் படப்பிடிப்பில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்பொழுது இந்த படம் முடியும் தருவாயில் பிரச்சனையில் முடிந்திருக்கிறது. எதனால் பிரச்சனை வந்திருக்கிறது என்று பார்த்தால், இந்த படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜ் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணமாக இருந்திருக்கிறார். இவர் லோகேஷ் கனகராஜின் அனைத்து படத்திலும் அவருக்கு பிடித்த எடிட்டர், மிகவும் திறமைசாலி. இவர் தான் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் வரும் காட்சிகளை நன்றாக இல்லை என்று கூறி திரும்ப எடுக்க சொல்லி இயக்குனரை வற்புறுத்தியுள்ளார்.

Also Read: லியோவுடன் கார் சேசிங்கில் மாஸ் காட்டும் ரோலக்ஸ்.. லோகேஷ்க்கு ட்ரீட் கொடுத்த புகைப்படம்

இதைப் பற்றி சிவகார்த்திகேயனிடம் தெரிவிக்காமலேயே பலமுறை ரீடேக் எடுத்திருக்கின்றனர். இது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்திருக்கிறது. அதன்பின் எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். இதனால்தான் படப்பிடிப்பு பல மாதங்கள் நிறுத்தப்பட்டு தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதை இயக்குனர் சிவகார்த்திகேயனிடம் கடைசி வரை தெரிவிக்கவில்லை. ஆனால் இதுவரை லோகேஷ் கனகராஜ் படத்தில் எடிட்டர் பிலோமின் ராஜ் வேலை செய்யும் போது, இது போன்ற எந்த பிரச்சினையும் செய்ததில்லை. படத்தை பிரமாதமாக கொண்டு வந்துள்ளார். இவர் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனை இப்படி அசிங்கப்படுத்தியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

Also Read: லியோ படத்தை விட ரஜினிக்காக மெனக்கெடும் லோகேஷ் .. விக்ரமை விட வெறித்தனமாக தயாராகும் ஸ்கிரிப்ட்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்