வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய், லோகேஷுக்கு இடையே இவ்வளவு பிரச்சனையா 100% உறுதி செய்த 2ம் பாதி.. மரண பீதியில் தளபதி-லலித்

Vijay-Lokesh: லியோ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது விஜய் மற்றும் லோகேஷ் இடையே பிரச்சனை இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் லியோ படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட லோகேஷ் நானும் விஜய்யும் சேர்ந்து படப்பிடிப்பில் இருக்கும் போது தான் அந்த செய்தியை பார்த்து சிரித்தோம் என்று சொல்லி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

ஆனால் லியோ படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் லோகேஷ் மற்றும் விஜய் இடையே இருக்கும் பிரச்சனை அம்பலமாகி இருக்கிறது. அதாவது லியோ படத்தின் முதல் பாதி லோகேஷ் ஸ்டைலில் மிகவும் அபாரமாக இருக்கிறது. அதில் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு படம் பயங்கரமாக எடுத்திருக்கிறார்.

ஆனால் லியோ படத்தின் இரண்டாம் பாதியை பார்த்தால் கண்டிப்பாக இது லோகேஷ் எடுத்து இருக்கிறார் என்று யாரும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு நிறைய இடங்களில் தொய்வு இருக்கிறது. லோகேஷை பொறுத்தவரையில் ஒரு காட்சியை நிதானிப்பதற்கு உள்ளாகவே அடுத்தடுத்த காட்சிக்கு சென்று விடுவார். ஆனால் இரண்டாம் பாதியில் அது சுத்தமாகவே இல்லை.

மேலும் ரசிகர்களையும் இரண்டாம் பாதியில் திருப்தி படுத்தவில்லை. ஆகையால் லோகேஷின் உதவி இயக்குனர் ரத்னகுமார் தான் லியோ படத்தின் இரண்டாம் பாதியை எடுத்து இருப்பாரோ என்ற சந்தேகம் இப்போது வந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் லியோ படத்தின் மொத்த பேரும் டேமேஜ் செய்யும் விதமாக அமைந்திருக்கிறது.

இதுவரை லோகேஷ் தனது படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் எடுத்ததில்லை. விஜய் தான் த்ரிஷாவை கதாநாயகியாக போட சொன்னதாகவும், ரொமான்ஸ் காட்சிகள் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக ஒரு தகவல் வெளியானது. மேலும் லோகேஷ், விஜய் இடையே வாக்குவாதம் ஏற்பட படத்தில் இருந்து லோகேஷ் விலகி விட்டாராம். அதன் பிறகு ரத்னகுமாரை வைத்து லியோ படத்தை எடுத்து முடித்துவிட்டனர்.

மேலும் ஆடியோ லான்ச் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது நிர்பந்தத்தின் லோகேஷ் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். மேலும் பீஸ்ட் ரிலீஸ் சமயத்தில் சன் டிவியில் நெல்சன் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து ப்ரோமோஷனுகாக ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் லோகேஷ் மட்டும் தனியாகத்தான் பேட்டி கொடுத்திருந்தார். இப்போது லியோ படத்தின் இரண்டாம் பாதியை பார்த்து விட்ட ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருவதால் ஆயிரம் கோடி வசூல் செய்யுமா என்ற பீதியில் விஜய் மற்றும் தயாரிப்பாளர் லலித் உள்ளனர்.

- Advertisement -

Trending News