வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

முக்கி முக்கி 50வது படத்தில் நடிக்கும் இடுப்பழகி சிம்ரன்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்

சிம்ரன் சினிமாவில் பல வருடங்களாக இருந்தும் தனது 46வது வருடத்தில் தான் 50வது படத்தை எட்டி உள்ளார். ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதுவும் ஹீரோக்கள் மிஞ்சும் அளவுக்கு சிம்ரன் நடனம் ஆடுவார்.

இந்நிலையில் தனது மார்க்கெட் குறைய தொடங்கியவுடன் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வில்லி, அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறார். கடைசியாக ராக்கெட் தி நம்பி விளைவு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Also Read : தாலி கட்டிய பின் சினிமாவிற்கு முழுக்கு போட்ட 5 நடிகைகள்.. கல்லா காலியானதால் மீண்டும் நடிக்க வந்த சிம்ரன்

இந்நிலையில் சிம்ரன் தனது 50 ஆவது படமான சப்தம் படத்தில் நடிக்கிறார். இதற்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. ஈரம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் ஈரம் பட கதாநாயகன் ஆதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் சப்தம் படத்தில் லட்சுமி மேனனும் நடிக்கிறார். இந்த படம் ஹாரர் திர்ல்லர் படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளனராம். இந்த போஸ்டரில் சிம்ரனை பார்க்கும்போது வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இப்போது படப்பிடிப்பு விரைந்து நடைபெற்ற வருகிறதாம்.

Also Read : என்ன இது சிம்ரன்? வயசானாலும் உன்னோட அழகும் ஸ்டைலும் குறையவே இல்ல

மேலும் சப்தம் படத்தில் சிம்ரன் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் மூலம் சிம்ரனுக்கு சரியான கிடைக்கும். இப்போது சப்தம் பட போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

simran-actress-cinemapettai

Also Read : வாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட 3 நடிகைகள்.. கடைசியாக தேர்வான இடுப்பழகி சிம்ரன்

- Advertisement -

Trending News