இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்.. ரஜினி, அஜித்தை ஓரம் கட்டிய விஜய்

இப்போது டாப் நடிகர்களின் எந்த போட்டோ இணையத்தில் வெளியானாலும் உடனே அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி விடுகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ரசிகர்களால் அதிக வைரல் ஆக்கப்பட்ட மூன்று ஹீரோக்களின் போட்டோக்களை இப்போது பார்க்கலாம். ரஜினி சமீப காலமாக நிறைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

அதுமட்டுமின்றி ஜெயிலர் போஸ்டரும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஆனாலும் இந்த வருடம் ரஜினி தன்னுடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் அதில் ரஜினி பத்து வயது குறைந்தது போல் இளமையாக காட்சி அளித்தார்.

Also Read : கமலை பார்த்து சுதாரித்துக் கொண்ட ரஜினி.. கெத்தை விடாமல் பிடித்து தொங்கும் சூப்பர் ஸ்டார்

இதற்கு அடுத்தபடியாக அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது எடுக்கப்படும் போட்டோக்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகி வந்தது. இந்நிலையில் சில மாதங்களாகவே அஜித், ஷாலினி ரொமான்டிக் போட்டோஸ் இணையத்தில் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தங்களுடைய 23 வது திருமண நாளை இவர்கள் கொண்டாடி இருந்தனர்.

அப்போது அஜித், ஷாலினி இருவரும் கன்னத்தோடு கன்னம் வைத்து ஒரு புகைப்படம் எடுத்திருந்தனர். இந்தப் புகைப்படத்தை ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது.

Also Read : அந்த விஷயத்தில் கட்டன் ரைட்டாக இருக்கும் ரஜினி.. கமலுக்கு இருக்கும் தைரியம் சூப்பர் ஸ்டாருக்கு இல்ல

இப்போது ரஜினி, அஜித்தை ஓரம் கட்டும் அளவிற்கு விஜய்யின் போட்டோ இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. அதாவது கடந்த சில வருடங்களாக விஜய் தனது பெற்றோருடன் பேசுவதில்லை என ஒரு செய்தி அதிகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் தனது பெற்றோரின் ஐம்பதாவது திருமண நாளை முன்னிட்டு விஜய் தனது அம்மாவுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார்.

அந்தப் புகைப்படம் தான் இப்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. ஆனாலும் விஜய் தனது மனைவியுடன் எந்த ஒரு புகைப்படமும் வெளியிடாதது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் விரைவில் விஜய் தனது மனைவி சங்கீதா உடன் ஒரு போட்டோ எடுத்து வெளியிட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்

Rajini-Vijay-Ajith

Also Read : பழசை மறந்து அம்மாவை தேடி போன வாரிசு.. ட்ரெண்டாகும் விஜய்யின் போட்டோ

- Advertisement -