புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அடையாளம் தெரியாமல் மாறிப்போன லாஸ்லியா.. நீங்க ஹீரோயின் மெட்டீரியல் இல்ல என கலாய்க்கும் ரசிகர்கள்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பிக் பாஸில் கிடைத்த வாய்ப்பின் மூலம் வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு கவின் உடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆரம்பத்தில் சற்று குண்டாக இருந்த லாஸ்லியா இப்போது ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். மேலும் விதவிதமாக போட்டோ சூட் நடத்தியும் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

Also Read : பீச் மணலே சூடாகும் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய போட்டோஸ்

இவர் கடைசியாக கே எஸ் ரவிக்குமார், தர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான கூகுள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார். ஆனால் லாஸ்லியான நடிப்பில் வெளியான எந்த படமுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் தன்னை ஹீரோயினாக ரசிகர்களிடம் நிரூபிக்க வேண்டும் என போராடி வருகிறார்.

அதற்காக பல முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இப்போது மிகவும் மெலிந்து போன புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என லாஸ்லியாவை கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

Also Read : ஸ்கூல் ட்ரெஸ்ஸில் கிறங்க வைத்த லாஸ்லியாவின் புகைப்படம்..ஆளே அடையாளம் தெரியல

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன பிக் பாஸ் லாஸ்லியா

losilya

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த பிரியா பவானி ஷங்கர் போன்ற பல நடிகைகள் இப்போது ஹீரோயின் அந்தஸ்தை பெற்று விட்டார்கள். மேலும் லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 ரன்னர் அப்பாக இருந்தாலும் சினிமாவில் வாய்ப்பு வருகிறதே தவிர அவருக்கான அங்கீகாரம் தற்போது வரை கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.

ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என கலாய்க்கும் ரசிகர்கள்

bigg-boss-losilya

Also Read : அடுத்த கவின், லாஸ்லியா இவங்கதான்.. புருஷன், பொண்டாட்டியா தான் வெளியில போவாங்க போல

- Advertisement -

Trending News