பத்திரிகையாளர்கள் கேட்ட ஒரே கேள்வி.. கதறி கதறி ஒப்பாரி வைத்த தர்ஷா குப்தா

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான தர்ஷா குப்தாவுக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து பெரிய திரைக்கு என்ட்ரி கொடுத்த இவர் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதன் பின்னர் இப்போது வெளியாகி இருக்கும் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா செய்தியாளர்களின் கேள்விக்கு சுவாரசியமாக பதில் அளித்தார். அப்போது ஒரு நிருபர் அவரிடம் கிறிஸ்மஸ் நாளன்று கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு இருந்தது பற்றி கேள்வி எழுப்பினார்.

Also read: ஹாரரும் இல்ல, காமெடி இல்ல.. அனல் பறக்கும் ஓ மை கோஸ்ட் படத்தின் ஸ்டோரி ரிவியூ

அதற்கு பதில் அளித்த தர்ஷா குப்தா கிறிஸ்மஸ் பண்டிகை என்பதால் போட்டோ சூட் நடத்தினேன். அதில் கவர்ச்சி கவர்ச்சி எல்லாம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று கூறினார். மேலும் சதீஷ் உடன் அவருக்கு இருந்த பிரச்சினை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதாவது ஓமை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் அணிந்திருந்த உடையை பற்றி சதீஷ் கிண்டல் அடித்து பேசி இருந்தார்.

அதற்கு தர்ஷா குப்தாவும் ஒரு பதிலடி கொடுத்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு என்று செய்திகள் வெளி வந்தது. ஆனால் இப்போது அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று தர்ஷா கூறியுள்ளார். அதன் பிறகு ஒரு பத்திரிக்கையாளர் உங்களுக்கு சினிமாவை பொறுத்தவரை முதிர்ச்சி என்பது இல்லை. அதனால் தான் நீங்கள் அடிக்கடி கோபப்படுகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

Also read: சதீஷ் சொன்னது எல்லாம் பொய்.. வெளுத்து வாங்கிய தர்ஷா குப்தம்

இதை எதிர்பார்க்காத அவர் நான் யாரிடமும் கோபப்பட்டது இல்லை. உங்களுக்கு ஏன் அப்படி தோன்றுகிறது. நீங்கள் சொல்லித்தான் இப்படி ஒரு விஷயம் இருப்பதே எனக்கு தெரிகிறது. என்னை சுற்றி இருப்பவர்களுக்கு என்னுடைய குணம் எப்படி என்று தெரியும். ஆனால் நான் கோபப்படுவதாகவும், திமிராக நடந்து கொள்வதாகவும் எதற்கு செய்திகளை வெளியிடுகிறீர்கள்.

நான் எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவள் தான். எதற்காக என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் கதறி அழ தொடங்கி விட்டார். இதனால் பதறிப் போன செய்தியாளர்கள் அவரை சமாதானப்படுத்தி சிரிக்க வைத்தனர். இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் எதற்காக இப்படி ஒரு கேள்வி கேட்டு அவரை அழ வைக்கிறீர்கள் என்று தர்ஷாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

Also read: பட வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வரும் 4 நடிகைகள்.. படு கிளாமரில் தர்ஷா குப்தா