சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகர் இவர்தான்.. வில்லனா இருந்து ஹீரோவானவரு!

சினிமாவை பொருத்தவரை ஒரு சில படங்களில் நடித்து விட்டாலே அவர்களுக்கு கொம்பு வந்துவிடும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். சில நடிகர்கள் அடக்க ஒடுக்கமாக இருந்தாலும் பல பேர் சினிமாவை ஒரு பொழுது போக்காகவே கருதுகின்றனர்.

சினிமாவுக்கு வந்த உடன் தங்களுக்கு இல்லாத பழக்கங்களைக்கூட பழகிக் கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக நடிகைகளுடன் எஞ்சாய் செய்வது, இரவு பார்ட்டி என எப்போதுமே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

இது இப்போது மட்டுமில்லை. ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே சினிமாக்காரர்கள் இப்படித்தான் என்கிறார்கள் கோலிவுட். அப்படிப்பட்ட சினிமாவில் வில்லனாகவும் ஹீரோவாகவும் பின்னர் ஒரு காலத்தில் அரசியல்வாதியாகவும் கலக்கிய ஒருவர் இதுவரை கிசுகிசு என்பதில் சிக்கியதே இல்லை என ஆச்சரியமாக கூறுகின்றனர்.

அவர் வேறு யாரும் இல்லை. நம்ம வீரமான நெப்போலியன் தான். எஜமான் போன்ற படங்களில் கொடூர வில்லனாக நடித்து பின்னர் கிழக்குச் சீமையிலே படத்தில் வரவேற்பு கிடைத்து தொடர்ந்து சீவலப்பேரி பாண்டி படத்தின் மூலம் ஹீரோவாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் நெப்போலியன்.

அடுத்தடுத்த நெப்போலியன் நடித்த படங்கள் அனைத்துமே தொடர் வெற்றி பெற்றதால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். பின்னாளில் சினிமாவில் கிடைத்த புகழை வைத்து அரசியலிலும் தன் பங்காற்றினார்.

இப்படி சினிமா மற்றும் அரசியல் என ஒரே நேரத்தில் பயணித்தாலும் தற்போது வரை எந்த ஒரு நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டவில்லை என்கிற பெருமையே நெப்போலியனின் பெயரை காலத்துக்கும் பேசும் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள். நடிகைகளிடம் அப்படி ஒரு கண்ணியமாக நடந்து கொள்வாராம் நெப்போலியன்.

neppolian-cinemapettai-01
neppolian-cinemapettai-01

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -