டி ஆர் போல ஆல் ரவுண்டராக கலக்கும் ஒரே நடிகர்.. எல்லா வேலையும் பார்ப்பார் போல

டி ராஜேந்தர் பொருத்தவரை அவர் ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் யாருடைய தயவும் தேவை இல்லாமல் அவர் ஒருத்தரே இறங்கி எல்லா வேலையும் செய்து படத்தை எடுத்து முடிக்கக்கூடிய பன்முக திறமை கொண்டவர். அந்த காலத்தில் இவருடைய படம் வெளிவருகிறது என்றால் அதற்கு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக, பைட் மாஸ்டராகவும் ஆல் ரவுண்டு கலக்கி குடும்பங்களை கவர்ந்த நடிகர்.

இதே போல் இந்த காலத்திலும் இவரின் திறமைக்கு இணையாக ஒருவர் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவிற்கு இசையமைப்பாளராக உள்ளே நுழைந்தார். பிறகு தொடர்ந்து 5 வருடங்கள் இசையமைப்பாளராக இருந்தவர் நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி.

Also read: படப்பிடிப்பில் தனக்கு நடந்த மோசமான ஆக்சிடென்ட்.. உயிரைக் காப்பாற்றியது யாருன்னு தெரிவித்த விஜய் ஆண்டனி

இப்படத்தின் மூலம் இவருக்கு பரவலான வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இவருக்கு ஹீரோவாக நடிப்பதற்கு அதிக ஆர்வம் வந்துவிட்டது. அதனால் சலீம், பிச்சைக்காரன், சைத்தான் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்து எல்லோரும் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டார். அத்துடன் இவர் படங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இவருக்கு கிடைத்துவிட்டது.

இவர் தற்போது டிஆர் போலவே இவருடைய படத்திற்கு ஹீரோவாகவும், இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகர், திரைப்பட தொகுப்பாளர், பாடல் ஆசிரியர், ஆடியோ பொறியாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என்று ஆல் ரவுண்டராக கலக்கி கொண்டு வருகிறார். இதைப்பற்றி இவரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது நீங்களும் டி ஆர் ஒன்றாக தான் எங்களுக்கு தெரிகிறது.

Also read:பேசக்கூட முடியாமல் தவிக்கும் விஜய் ஆண்டனி.. ஒரே விபத்தால் திசை மாறிய வாழ்க்கை

அத்துடன் இந்த காலத்து மாடர்ன் டி. ராஜேந்தர் ஆகவும் உங்களை நாங்கள் பார்த்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார். அதற்கு விஜய் ஆண்டனி அவரைப் போல் என்னால் வர முடியாது அவர் வேற நான் வேற. அது அவருடைய ஸ்டைல அவரு செய்வார். அவர் படத்திற்கு வேறு யாரையும் சேர்க்க விருப்பம் இல்லாமல் அவருக்கு எல்லாமே தெரிந்ததால் செய்தார்.

ஆனால் நான் அப்படி இல்லை எனக்கு வேற யாரும் கிடைக்கவில்லை. அதனால் தான் நான் தற்போது இயக்குனராக வருவதற்கும் அதுதான் காரணம். அத்துடன் என்னுடைய திறமையை நான் காட்ட வேண்டும் என்றால் மற்றவர்களை எதிர்பார்ப்பதை விட நானே முன்வந்து எல்லாம் செய்தால் எனக்கு அது ஒரு தனி வெற்றி தான். அதை நான் பார்க்க வேண்டும் என்று தான் ஒவ்வொன்றாக செய்கிறேன் என்று பதில் அளித்து இருக்கிறார்.

Also read: மெர்சலை மிஞ்சிய காப்பியா இருக்குதே.. விஜய் ஆண்டனி படத்திற்கு வந்த பெரிய சோதனை 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்