சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தளபதி 67 அப்டேட்.. உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா

நீண்ட காலமாகவே தளபதி 67 திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் மாஸ் கூட்டணி தான். வாரிசு பட மோடில் இருந்து வெளிவந்திருக்கும் ரசிகர்கள் தற்போது இந்த படத்தை பற்றிய அப்டேட்டுக்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திர பட்டாளங்கள் குறித்த செய்தி அனைவருக்கும் ஒரு பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது. அதற்கும் மேலாக பிப்ரவரி மாத தொடக்க நாட்களில் இந்த படம் குறித்த மாஸ் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வர இருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தளபதி 67 திரைப்படத்தின் ஸ்பெஷல் அப்டேட் ஒன்று வர இருப்பதாக செய்திகள் வெளியானது.

Also Read : இந்திய அளவில் பிரமிக்க வைத்த இயக்குனர் கூட்டணியில் தளபதியின்-69.. மார்க்கெட்டை அடித்து நொறுக்கும் விஜய்

இதுவரை அரசல் புரசலாக மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த செய்திகள் இப்போது அதிகாரப்பூர்வமாக வெளிவர இருக்கிறது. அதனால் இன்று காலை முதலே சோசியல் மீடியா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதிலும் விஜய் ரசிகர்கள் சொல்ல முடியாத எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் விக்ரம் பட பாணியில் ப்ரோமோ வீடியோ தான் வெளிவர இருப்பதாகவும், அது வேற லெவல் சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்ற கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த அந்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தான் இப்போது வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read : சிம்பு பிறந்த நாளுக்கு அஜித், விஜய் அப்டேட்.. இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெஷல் டே ஆக அமையும்.!

அதுமட்டுமின்றி தயாரிப்பு நிறுவனம் இதற்கான ஒரு போஸ்டரையும் வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது. அந்த போஸ்டரில் கருப்பு நிற பின்னணியில் சிவப்பு எழுத்துக்களால் தளபதி 67 என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போதே படத்தில் எந்த அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது.

அந்த வகையில் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்த தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் ப்ரோமோ டீசர் எப்போது வெளிவரும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர். இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

thalapathy-67

Also Read : 30 வயது நடிகைக்காக பினாமியை வைத்து படம் எடுக்கும் விஜய்.. அடுத்தடுத்து கசியும் தளபதியின் சுயரூபம்

- Advertisement -