நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் தளபதி தான்.. சினிமா பிரபலத்தை ரவுண்டு கட்டிய ரஜினி ரசிகர்கள்

இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் என்றால் ஒரே அடையாளம் அது ரஜினிகாந்த் தான். தெலுங்கு, கன்னட மொழியில் உள்ள பிரபலங்களை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தால் கூட அவர்கள் ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று கூறி அந்த பட்டத்தை ஏற்க மறுத்து விடுவார்கள். ஆனால் சமீபத்தில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று பிரபலங்கள் பாராட்டினார்கள்.

இதற்கு விஜய்யும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இப்போது விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு மோதிக்கொள்ள இருக்கிறது. ஆகையால் தற்போது சமூக ஊடகங்களில் விஜய், அஜித்தை பற்றிய பேச்சு தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Also Read : பிறந்தநாளுக்கு கூட செய்யாததை புத்தாண்டுக்கு செய்து காட்டிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் என நிரூபித்த தருணம்

இந்த சூழலில் சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி தன்னுடைய யூடியூப் சேனலில் சினிமாவில் நடக்கும் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார். ஆகையால் இவரது சேனலுக்கு ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் விஜய்யின் படம் தான் எப்போதுமே அதிக வசூல் பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆகையால் தளபதி தான் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என பிஸ்மி கூறியிருந்தார். இவர் பேசியது அப்போதே ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

Also Read : ராகவேந்திரா சாமிக்கு பின் சூப்பர்ஸ்டார் மதிக்கும் சாமி இதுதான்.. வெளிப்படையாக மேடையில் பேசிய ரஜினி

இப்போது அதைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து பிஸ்மி வீட்டை முற்றுகையிட்டனர். அதுமட்டுமின்றி அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒருவரை புகழ்வதாக நினைத்துக்கொண்டு ரஜினியை அவமானப்படுத்த வேண்டாம் என ரஜினி ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும் இதுவரை 2.0 படம் தான் அதிக வசூல் செய்ததாக சுட்டிக்காட்டி இருந்தனர். ஆனால் பிஸ்மி பேசுகையில் சினிமாவில் நடக்கும் உண்மையான விஷயங்களை தான் பகிர்ந்து கொள்வதாக கூறினார். அதுமட்டுமின்றி யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை என்றும் கூறியிருந்தார். அப்போது இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

Also Read : சூப்பர் ஸ்டார் பட்டத்தை குறிவைக்கும் மாஸ் ஹீரோக்கள்.. ரஜினி என்ற ஒற்றை மனிதருக்கு இருக்கும் பவர்

- Advertisement -