சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அப்ப லியோ ட்ரெய்லர் எல்லாமே பக்கா பிளானா.? மியூட் செய்யப்பட்ட கெட்ட வார்த்தை, கிளம்பிய பூகம்பம்

Leo Trailer: கடந்த சில நாட்களாகவே லியோ ட்ரெய்லர் விவகாரம் தான் மீடியாவில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதில் வன்முறை உச்சகட்டத்தில் இருந்தது ஒரு புறம் இருந்தாலும் விஜய் பேசிய கெட்ட வார்த்தை தான் ஒட்டு மொத்த ஆடியன்ஸுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

ட்ரெய்லரிலேயே இப்படி இருந்தால் படத்தில் இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்குமோ எப்படி குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க முடியும் என பல ஃபேமிலி ஆடியன்ஸ் வெளிப்படையாகவே புலம்பி வந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் லோகேஷ் அதற்கு ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார்.

அதாவது நான் கட்டாயப்படுத்தி தான் விஜய்யை அந்த வார்த்தையை பேச சொன்னேன். அதனால் முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் இந்தப் பிரச்சனை சலசலக்கப்பட்டு தான் வந்தது. இந்த சூழலில் சம்பந்தப்பட்ட அந்த வார்த்தை ட்ரெய்லரில் தற்போது மியூட் செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்தாலும் அடுத்த ஒரு பூகம்பமும் வெடித்திருக்கிறது. அதாவது இந்த விஷயத்தை படகுழு முன்பே செஞ்சிருக்கலாமே. அதை விட்டுவிட்டு ஊரையே கலவரமாக்கி இப்போது மியூட் செய்திருக்கிறார்கள் என்றால் எல்லாம் பக்கா பிளான் ஆகத்தான் இருக்கும் என்ற ஒரு கருத்தும் இப்போது கிளம்பியுள்ளது.

அப்படி என்றால் இதுவும் ஒரு பிரமோஷன் யுக்தியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படித்தான் நா ரெடி பாடல் வெளியானபோது விஜய் சிகரெட் பிடித்தபடி டான்ஸ் ஆடியது பூதாகரமாக வெடித்தது. அதை அடுத்து படகுழு வழக்கமாக இது போன்ற காட்சிகளின் போது போடும் வாசகத்தை போட்டு பிரச்சனையை முடித்தனர்.

அதேபோன்றுதான் இப்போதும் நடந்திருக்கிறது. இப்படி வேண்டுமென்றே ஒரு சர்ச்சையை உருவாக்கி பின்னர் பணிந்து போவது பயத்தினாலா அல்லது திட்டமா என இப்போது சோசியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் ட்ரெய்லர் சர்ச்சை முடிவுக்கு வந்தாலும் அதிலிருந்தே இன்னொரு பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

- Advertisement -

Trending News