Mystery Well: சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழும் நாள் நரகம் ஆகிவிடும். ஆனால் ஒரு அதிசய கிணறு உற்றுப் பார்ப்பவர்களின் மரணத்தை சொல்லும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆனால் ஆன்மீக நகரம் என்று சொல்லப்படும் வாரணாசியில் தான் அப்படி ஒரு கிணறு இருக்கிறது. சந்திரகூப் என்று அழைக்கப்படும் இந்த கிணறு காசியிலிருந்து சற்று தொலைவில் சித்தேஸ்வரி கோவிலில் இருக்கிறது.
சிவபெருமான் மீது அர்ப்பணிப்புடன் இருந்த சந்திர பகவானுக்கான அடையாளமாக இந்த கிணறு தோன்றியதாக கூறப்படுகிறது. சந்திர பகவானின் தவத்தை போற்றி சிவபெருமான் இந்த கிணற்றுக்கு சில மாய சக்திகளை வழங்கியதாகவும் புராணங்கள் சொல்கின்றன.
அதன்படி இந்த கிணற்றை உற்றுப் பார்ப்பவர்களின் பிம்பம் அதில் பிரதிபலிக்காவிட்டால் அடுத்த ஆறு மாதங்களில் அவருடைய மரணம் என்பது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.
மரணத்தை கணிக்கும் அதிசய கிணறு
புனித நதியான கங்கையை விட இது பழமையான கிணறு என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு சுற்றுலாத்தலமாக கருதப்படாவிட்டாலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது.
அதை காண்பதற்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அப்போது இந்த கிணற்றின் மீது நம்பிக்கை வைத்து உற்றுப் பார்ப்பவர்களும் இருக்கின்றனர்.
ஆனால் இதெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று சிலர் நிராகரித்தும் விடுகின்றனர். ஆனால் அதை நம்பும் மக்கள் இதை ஒரு புனித தளமாக கருதி வழிபட்டு வருகின்றனர்.
அதன் காரணமாகவே இந்த கிணற்றை உற்றுப் பார்ப்பதன் மூலம் தங்கள் உடல் மற்றும் ஆன்மா தூய்மை அடைகிறது என பக்தர்கள் நம்புகின்றனர். இப்படி ஒரு மர்மம் நிறைந்ததாக j பார்க்கப்படும் இந்த அதிசய கிணறு பலரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.