Vj Archana: சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ஒரு சிலரை மட்டும் எப்பொழுதுமே மறக்கவே முடியாத அளவிற்கு ஃபேவரிட் ஆக இருந்திருக்கிறார்கள். இந்த லிஸ்டில் அர்ச்சனாவையும் சொல்லலாம். ஆரம்பத்தில் ஜெயா டிவி மூலம் தொகுப்பாளனியாக பயணித்து சன் டிவியில் காமெடி டைம் மூலம் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து இளமை புதுமை நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கினார். அடுத்ததாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக பங்கேற்று பார்ப்பவர்களை என்டர்டைன்மென்ட் பண்ணி வந்தார். அடுத்ததாக ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோ மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.
ஆனால் பிக் பாஸில் அர்ச்சனாவுக்கு அதிகமான நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில் பல இன்னல்களை சந்தித்தார். ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து எப்படி முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
25 வருட கனவை நிறைவேற்றிய அர்ச்சனா
அத்துடன் பெரிய திரையிலையும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததனால் அதையும் விடாமல் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி இவர் தொகுப்பாளனியாக நுழைந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிய நிலையில் தற்போது இவருடைய பல வருடக் கனவையும், அப்பாவின் ஆசையும் நிறைவேற்றி இருக்கிறார்.
அதாவது அர்ச்சனா மற்றும் தங்கை அனிதா சிறுவயதாக இருக்கும் பொழுது இவருடைய அப்பா கூறியது என்னவென்றால் பென்ஸ் கார் வாங்கி அதில் ஒரு ரைடு போகணும் என்றுதான். அதை தற்போது நிறைவேற்றி இருக்கிறார்.
சொகுசு காரை வாங்கிய அர்ச்சனா


அந்த வகையில் அர்ச்சனாவின் கணவர், மகள், அம்மா மற்றும் தங்கை என குடும்பத்துடன் பிரபல பென்ஸ் நிறுவனத்திற்கு சென்று புத்தம் புது காரை வாங்கி இருக்கிறார்கள். அர்ச்சனா வாங்கிய சொகுசு காரின் விலை 75 லட்சம் மதிப்புள்ள Mercedes benz நிறுவனத்தின் GLC 220d என்ற காரை தான்.
காரின் சாவியை வாங்கியதும் அப்பா சொன்ன வார்த்தையை நினைத்து பூரித்துப் போன அர்ச்சனா ஆனந்த கண்ணீர் வடித்து அம்மாவையும் தங்கையும் உட்கார வைத்து அப்பாவின் ஆசையை நிறைவேற்றி விட்டார். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதை தூக்கிப்போட்டு வெற்றி பெற முடியும் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்.