பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி ஏமாந்த 5 படங்கள்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்கள்

பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படங்கள் அதிக லாபத்தை தரும் என சில தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுக்கின்றன. பல சமயங்களில் அது கை கொடுத்தாலும் ஒரு சில படங்கள் மிக மோசமான தோல்வியையும் சந்தித்துள்ளது. அவ்வாறு பிரமாண்டத்தை மட்டுமே நம்பி ஏமாந்த 5 படங்களை பார்க்கலாம்.

பாபா : ரஜினிகாந்த் தனது லோட்டஸ் இன்டர்நேஷனல் பேனரின் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த படம் பாபா. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, சுஜாதா, கவுண்டமணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் வசூலில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

சாஹோ : சுஜித் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ், ஷர்த்தா கபூர், ஜாக்கி, அருண்விஜய் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சாஹோ. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. பிரபாஸின் பாகுபலி படம் வசூல் சாதனை படைத்த நிலையில் சாஹோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை.

ராதே ஷ்யாம் : பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம். இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருந்தார். ராதேஷ்யாம் 350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட நிலையில் வெறும் 214 கோடி மட்டுமே வசூல் செய்தது.

தர்பார் : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. இந்த நஷ்டத்தை ரஜினி ஈடுகட்ட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.

ஐ : ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ஐ. இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்திருந்தார். ஐ படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் வேணு ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவு லாபத்தை பெற்றுத்தரவில்லை.