இந்த தியேட்டர்களில் மட்டும் வெளியாகும் நள்ளிரவு காட்சி.. துணிவு, வாரிசுக்கு பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடு

எப்போதுமே பண்டிகை என்றால் போட்டி போட்டுக் கொண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். பண்டிகைக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் மோதிக்கொள்ள இருக்கிறது. சாதாரணமாக தனித்தனியாக விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியானல் இந்த இரு ரசிகர்கள் மத்தியில் சண்டை நிலவும்.

ஆனால் இப்போது கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகுவதால் கண்டிப்பாக ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் குறையாது. இந்நிலையில் வருகின்ற 12ஆம் தேதி அதிகாலை வாரிசு மற்றும் துணிவு படம் வெளியாக உள்ளது.

Also Read : வாரிசுக்கு துணிவு காட்டிய பயம்.. அதிரடியாக விஜய் போட்ட கட்டளை

டாப் ஹீரோக்களின் படங்களில் அதிகாலை காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். அந்த வகையில் சென்னையில் உள்ள திரையரங்குகளில் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கான அதிகாலை காட்சி 1 மணி மற்றும் 5 மணி காட்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட வருகிறது.

இதில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்காக சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 50 திரையரங்குகள் இந்த சிறப்பு காட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது எந்த படம் முதலில் ரிலீஸ் ஆகும் என்பது தெரியவில்லை.

Also Read : ஒரே ட்ரெய்லரில் பயத்தை காட்டிய துணிவு அஜித்.. மொத்தத்தையும் மாத்த போட்ட திட்டம்

ஆனால் ஒரே தியேட்டரில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. ஏனென்றால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு அமைதியாக செல்வார்களா என்பதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது. ஏதாவது கலவரத்தில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது.

இதற்காக தற்போது எல்லாம் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் பலத்த பாதுகாப்புடன் படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். மேலும் படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் கூட இல்லாத நிலையில் படத்திற்கான வேலைகள் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Also Read : சென்சார் போர்டுக்கு தண்ணி காட்டிய வாரிசு.. உண்மை வெளிப்பட்டதால் திக்குமுக்காடிய வம்சி

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -