தி ரோட் படத்தின் மேக்கிங் வீடியோ.. பதற வைக்கும் திரிஷா

திரிஷா இன்று தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரிஷாவுக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த நிலையில் சில வருடங்களாக சரிவை சந்தித்தார். இதனால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தினால் திரிஷாவின் மார்க்கெட் எகிறி உள்ளது.

இந்த படத்தில் இவருடைய குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் திரிஷாவுக்கு பட வாய்ப்பு குவிந்து வண்ணம் உள்ளது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also Read : திரிஷாவுக்கு பொருத்தமான ஜோடியாக நடித்த 5 நடிகர்கள்.. நிஜத்திலும் வளைத்து போட நினைத்த சிம்பு

இந்நிலையில் கடந்த ஆண்டு திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு தி ரோட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதேபோல் இந்தப் பிறந்தநாளுக்கு படக்குழு மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் விவேக் பிரசன்னா, எம்எஸ் பாஸ்கர், மியா ஜார்ஜ் மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் சாலை விபத்து மற்றும் அதன் மூலம் பழிவாங்கும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் 462 கிலோமீட்டர் உள்ளாகவே பழிவாங்குவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேக்கிங் வீடியோவில் திரிஷாவை பார்க்கும் போது பதற வைக்கிறது.

Also Read : கமலுக்கு ஜோடியாக திரிஷா இல்லனா நயன்தாரா.. ராசி இல்லாத நடிகை என ரிஜெக்ட் செய்த ரெட் ஜெயண்ட்

அரண்மனை படத்தை போல் இந்த படத்திலும் வித்தியாசமாகவும், ஆக்ரோஷமாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் திகில் படமாக தி ரோட் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மேக்கிங் வீடியோவின் மூலம் படத்தை விரைவில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

Also Read : பொறாமையில் போட்டி போட்டு நடிக்கும் 5 ஹீரோயின்கள்.. திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற பேச்சுக்கே இடம் இல்ல