ரஜினிக்காகவெல்லாம் ஒத்துக்காத அமிதாப்.. 170இல் நடிக்க சம்மதம் தெரிவித்த காரணத்தை போட்டு உடைத்த பிக் பி

Rajini in Thalaivar 170: இந்த ஆண்டுக்கான வெற்றி நாயகனாகவும், வசூல் மன்னனாகவும் படுஜோராக ஜெயித்து காட்டியவர் சூப்பர் ஸ்டார். இவர் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் தாறுமாறாக வெற்றியடைந்ததை ஒட்டி இவருடைய அடுத்த படமான 170வது படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் இணைந்திருக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

அந்த வகையில் தலைவர்170 படம் மல்டி ஸ்டார் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முன்னணி நடிகர்களை இதில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.  ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் போன்ற நடிகர்களை களம் இறங்குகிறார். இதில் அமிதாப்பச்சன் மற்றும் ரஜினி 32 வருடமாக நட்பு ரீதியாக பழகி இருக்கிறார்கள்.

அதனால் தான் ரஜினி படம் என்று சொன்னதும் அமிதாப் பச்சன் நடிக்க சம்மதம் கொடுத்துவிட்டார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் தற்போது இவர் உண்மையிலே நடிப்பதற்கான காரணம் என்னவென்று என்பதை போட்டு உடைத்திருக்கிறார். அதாவது இதில் நடிப்பதற்கு முக்கிய காரணம் இயக்குனர் இப்படத்தின் கதையை ஒன் லைன் ஸ்டோரி மூலமாக சொன்ன உடனே அவருக்கு பிடித்து போய்விட்டது.

அத்துடன் இதற்கு முன்னதாக இயக்கிய ஜெய் பீம் படத்தின் கதை அமிதாப் பச்சனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதேபோல இந்த படமும் ஒரு நல்ல கருத்தான படமாக இருக்கும் என்பதனால் தான் இவருடைய சம்மதத்தை கொடுத்திருக்கிறார். மற்றபடி ரஜினிக்காகவெல்லாம் இவர் நடிப்பதற்கு ஒத்துக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

அத்துடன் தற்போது இப்படத்திற்கான சூட்டிங் படுஜோராக போய்க் கொண்டிருக்கிறது. மேலும் ரஜினி இந்த படத்தில் அவருடைய காஸ்டியூம்க்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். அதற்கு காரணம் அமிதாப்பச்சன் இந்த படத்தில் நடிப்பதால் அவரை விட ஒரு பங்கு தூக்கலாக காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்து வருகிறார்.

ஏற்கனவே அமிதாப் ஹீரோவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தற்போது கதைக்கு ஏற்ற மாதிரி நடிப்பை கொடுத்து வருகிறார். இருந்தாலும் அவர் அளவுக்கு ஈடு கட்ட வேண்டும் என ரஜினிஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் தான் 170 படத்தில் இருந்து வெளிவந்த புகைப்படங்கள் அனைத்திலும் ரஜினி ரொம்பவே ஹேண்ட்ஸம் லுக் உடன் 40 வயது இளைஞர் போல் ஜொலித்துக் நடிப்பை கொடுத்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்