என் தலைவனையா அசிங்கப்படுத்துற, நடிகையால் ஆல்பர்ட் தியேட்டர் ஸ்கிரீனை கிழித்த விசுவாசி.. திரும்ப ரஜினி செய்த கைமாறு

Rajini: சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகள் கூட சொல்லும் என்று அப்பொழுதே வந்த பாடல் இந்த காலத்து வரை பெயர் பெற்று வருகிறது. அந்த அளவிற்கு ரஜினி அவருடைய ஸ்டைல், நடிப்பு அனைத்தையும் வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதனால் உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயருடன் முதல் இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் தான் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு 25 வருஷத்துக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். அதாவது கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் படையப்பா. இப்படம் வசூல் அளவிலும் விமர்சன ரீதியாகவும் வெற்றிவாகை சூடியது.

அப்படிப்பட்ட இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நெகட்டிவ் கேரக்டரில் படையப்பாவை சீண்டிப் பார்க்கும் ஒரு நடிப்பை கொடுத்து பிரபலமாகிவிட்டார். ஆனால் இதில் ஒரு காட்சியில் ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு ரஜினி வரும்பொழுது அவர் முன்னாடியே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து ரஜினிக்கு மரியாதை கொடுக்காமல் பேசியிருப்பார்.

இதை ஆல்பர்ட் தியேட்டர் பார்த்த ரசிகர்களில் ஒருவர் திடீரென்று எழுந்து திரையை கிழித்து விட்டார். ஏன் தலைவரே அசிங்கப்படுத்துற அளவுக்கு நீ என்ன பெரிய இவளா என்று கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டு இந்த மாதிரி ஒரு சம்பவத்தை செய்து இருக்கிறார்.

பிறகு அங்கே இந்த ஒரு விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி அவருடைய மேலாளரிடம் அந்த ரசிகரை எதுவும் பண்ண வேண்டாம். அவர் கிழித்த ஸ்கிரீனுக்கு என்ன செலவு ஆகுமோ அதை நான் ஈடு கட்டி விடுகிறேன் என்று ரசிகர்களுக்காக ரஜினி இதை கைமாறாக பண்ணியிருக்கிறார்.

ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய ரஜினி

இதற்கிடையில் படம் வெளி வருவதற்கு முன் கோவையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு பிரச்சினையில் திமுக-தமாக கட்சியின் சார்பாக ரஜினி பேசிய ஒரு விஷயம் ரசிகர்களை அதிகளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதாவது பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வாய்ஸ் கொடுக்காமல் அப்படியே திசை திருப்ப பார்த்த ரஜினி மீது ரசிகர்கள் கோபத்தில் இருந்தார்கள்.

இதனால் படையப்பா படம் வெளி வந்தால் ரசிகர்கள் எந்த அளவிற்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்று மிகப்பெரிய அச்சம் இருந்திருக்கிறது. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ரஜினி ரசிகர்களை நம்பி மட்டுமே அப்படத்தை சொன்ன தேதியில் வெளியிட்டார்.

அதே மாதிரி படம் வெளிவந்த பிறகு எல்லா சர்ச்சைகளையும் தவிடு பொடியாக்கி வந்த படங்களில் உள்ள சாதனைகளை முறியடிக்கும் விதமாக படையப்பா வெற்றி பெற்று இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்