ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கடைசி வரை ஒரு தலை காதலாக மாறிய நடிகையின் காதல்.. மரணப்படுக்கையில் நிறைவேறிய ஆசை

அன்று முதல் இன்று வரை ரொமான்டிக் ஹீரோவாக ரசிகைகளை சுண்டி இழுத்த நடிகர் ஒருவர், இரண்டு நடிகைகளை அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த நடிகருடன் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகை ஒருவர் அவரை உருக உருக காதலித்திருக்கிறார். கடைசிவரை தன்னுடைய காதலை அந்த நடிகரிடம் வெளிப்படுத்தவில்லை.

ஏனென்றால் அந்த சமயத்தில் தான் அந்த நடிகர் வேறொரு நடிகையை காதலித்து அவரை திருமணம் செய்து  கொண்டார். இதனால்  அவருடைய காதல் ஒரு தலை காதலாகவே மாறியது. இவர்கள் இருவரும் ஒரு சில படங்கள் மட்டுமே இணைந்து நடித்தனர். அதன் பிறகு அந்த ரொமான்டிக் ஹீரோவுக்கு திருமணமானது. பிறகு அவருடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தாலும், அந்த ஒரு தலை ராகம் இணைந்து நடிக்கவே மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் நடிகைக்கு கிடைக்காத சினிமா வாய்ப்பு.. பதவி ஆசையில் அரசியலில் போடும் பத்தினி வேஷம்

பிறகு குடும்பத்தினர் செய்த கட்டாயத்தால் அந்த  நடிகை பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு பின்பு விவாகரத்து பெற்றுவிட்டார். ஏனென்றால் அவருடனும் அந்த நடிகையால் சேர்ந்து வாழ முடியவில்லை. எல்லாம் அந்த ரொமான்டிக் ஹீரோவின் நெனப்புதான். எப்படியாவது ஒரே ஒரு தடவை அந்த ரொமான்டிக் ஹீரோவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று மறுபடியும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து அவருடன் ஒரு சில படங்களில் ஜோடி போட்டார்.

அந்த நேரத்தில் தான் நடிகைக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையில் இருந்த அவர் யாரையுமே பார்க்க விரும்பவில்லை, தனித்தே இருந்தார். ஆனால் தன்னுடைய மரணப்படுக்கையில் இருந்தபோது அந்த ரொமான்டிக் ஹீரோவை ஒரே ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று புலம்பித் தவித்துள்ளார். இது எப்படியோ அவருக்கு தெரிந்து விட, உடனே பதறி அடித்துக் கொண்டு நேரில் வந்து அந்த நடிகையுடன் நேரத்தை செலவிட்டிருக்கிறார்.

Also Read: சென்சார் போர்டை கவர்ச்சியால் அதிர வைத்த நடிகை.. 36 இடங்களில் கட் செய்து தூக்கிய படம்

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவருடன் உரையாடிய பிறகு தான், அந்த நடிகையின் உயிர் அவரை விட்டுப் பிரிந்தது. ஒரு வேலை ரொமான்டிக் ஹீரோவுக்கு முன்கூட்டியே அந்த நடிகையின் காதல் தெரிந்திருந்தால் நிச்சயம் அவருடன் சேர்ந்து வாழ்ந்து இருப்பார். ஏனென்றால் அந்த நடிகருக்கு லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் எல்லாம் சர்வ சாதாரணம்.

ஆனால் அந்த நடிகைக்கு பத்தோடு பதினொன்றாக வாழ விருப்பம் இல்லை. அதனாலேயே தன்னுடைய காதலை கடைசி நிமிடத்தில் தான்
தெரியப்படுத்தினார். அவரது மரணத்திற்கு பிறகு அந்த ரொமான்டிக் ஹீரோ எழுதிய இரங்கல் மடலில் இறந்தும் இரவா தோழி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: கேரக்டர் பிடிக்காமல் பாதியிலேயே வெளியேறிய நடிகை.. கடுப்பாகி பழி தீர்த்த இளைய நடிகர்

- Advertisement -

Trending News