ரிலீசுக்கு முன்பே பல கோடி வியாபாரம் பார்த்த சூர்யா-42.. ஆடியோ உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி விட்ட பிறகு சூர்யாவின் ரேஞ்ச் எங்கேயோ போய்விட்டது. நடிப்பு அரக்கனாகவே ரசிகர்களுக்கு தெரியும் சூர்யா, அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தின் மூலம் சூர்யா முதல் முதலாக சாதனை படைத்துள்ளார்.

ரிலீசுக்கு முன்பே இந்த படம் பல கோடி லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இப்போது ஆடியோ உரிமையை மட்டும் பிரபல நிறுவனம் பல கோடி கொடுத்து தட்டி தூக்கி உள்ளது. சூர்யா 42 படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

Also Read: எதிர்பார்ப்பை மிரளவிடும் சூர்யா 42.. அட்டகாசமான அப்டேட் கொடுத்த டீம்

இதில் 5 வேடத்தில் சூர்யா மிரட்டுகிறார். மேலும் பேண்டஸி கதையம்சம் கொண்ட சரித்திர படமாக தயாராகி வரும் இந்த படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அது மட்டுமல்ல நடிகர் சூர்யா இதுவரை நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமும் இந்த படம் தான்.

ஏனென்றால் அந்த அளவிற்கு பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கிக் கொண்டிருக்கின்றனர். மேலும் படத்தை தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

Also Read: வி சென்டிமென்ட்டில் இருந்து விலகிய சிறுத்தை சிவா.. சூர்யா 42 டைட்டில் இதுதான்!

மேலும் இந்த படத்தின் டைட்டிலும் நாளை வெளியாக உள்ளது. அதற்கு முன்பு சர்ப்ரைஸ் அப்டேட் ஆக சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது யார் என்கின்ற தகவலை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கான ஸ்பெஷல் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். மேலும் சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை பெரும் தொகையை கொடுத்து சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமை மட்டும் ரூபாய் 10 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரும் தொகைக்கு விற்பனை செய்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Also Read: ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த சூர்யா 42.. ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்

Next Story

- Advertisement -