பல வருடங்கள் கழித்து ஷாலினியை இறுக்கமாக கட்டி அணைத்து ரொமான்ஸ் பண்ணும் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

கோலிவுட்டில் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் அஜித்- ஷாலினி ஜோடி. இவர்களுக்கு ஆத்விக், அனோஷ்கா என்று இரு குழந்தைகள் உள்ளனர்.

மேலும் ஷாலினி திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது  ஷாலினி கோலிவுட்டின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க  உள்ளாராம்.

அவ்வப்போது ஷாலினி பொது இடங்களிலும் திரையரங்குகளிலும் மட்டுமே தென்படுவார். மேலும் அப்போது எடுக்கும் புகைப்படங்களை தல வெறியர்கள் வெறிக்கொண்டு பரப்புவர்.

இந்த நிலையில் ஷாலினியும் அஜித்தும் இணைந்து எடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, தல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

என்னதான் திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும், காதல் குறையாமல் தற்போது வரை காதலில் மின்னிக் கொண்டிருக்கும் அஜித்தும் ஷாலினியும் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் ஷாலினி  மஞ்சள் நிற உடையும், அஜித் கருப்பு நிற உடையும் அணிந்து உள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருவதோடு, ரசிகர்களின் ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்