300 கோடி வசூலிச்சும் செல்லா காசான தி கேரளா ஸ்டோரி.. நொந்து போன இயக்குனர்

The Kerala Story: சுதிப்டோ சென் இயக்கத்தில் சித்தி இத்னானி, அடா ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் தான் தி கேரளா ஸ்டோரி. கடந்த மே மாதம் வெளியான இப்படம் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு ஆளானது. பார்ப்பவர்களுக்கு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்ததாலேயே இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்தது.

ஆனாலும் திட்டமிட்டபடி படத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியிட்ட பட குழு தமிழ்நாடு, கேரளா உட்பட சில மாநிலங்களை தவிர மற்ற பகுதிகளில் வசூலை அள்ளியது. அதன்படி படம் வெளியான ஒரு வாரத்திலேயே நூறு கோடி வரை கலெக்ஷன் பார்த்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

Also read: குறைந்த பட்ஜெட், 10 மடங்கு லாபம்.. வியக்க வைக்கும் தி கேரளா ஸ்டோரி மொத்த வசூல்

அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் இப்படத்திற்கான வரவேற்பு மட்டும் குறைவதாக இல்லை. அதனாலேய மிகக் குறைந்த நாட்களில் இப்படம் 200 கோடி வசூலையும் தாண்டியது. விஜய், அஜித் போன்ற ஹீரோக்களே இந்த அளவுக்கு வசூலை எடுப்பதற்கு திணறும் நிலையில் தி கேரளா ஸ்டோரி இப்போது வரை 303 கோடியை வசூலித்து இருக்கிறது.

இத்தனைக்கும் இப்படம் வெறும் 15 கோடியில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பல மடங்கு வசூலை வாரி குவித்திருக்கும் இப்படத்தை ஓடிடியிலும் வெளியிட்டு நல்ல லாபத்தை பார்த்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர் மனக்கணக்கு போட்டிருந்தார். ஆனால் உங்கள் திட்டமெல்லாம் எங்களிடம் செல்லுபடியாகாது என்னும் விதமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

Also read: நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையே நடந்த வசூல் வேட்டை.. தி கேரளா ஸ்டோரி பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

அதாவது பல சர்ச்சைகளுக்கு காரணமான இப்படத்தை வாங்குவதற்கு எந்த ஓடிடி நிறுவனமும் இப்போது தயாராக இல்லையாம். ஏற்கனவே இப்படத்தால் நடந்த கலவரம் அனைவருக்கும் தெரியும். அதனாலேயே இப்போது இப்படத்தை வாங்குவதற்கு எந்த நிறுவனமும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

300 கோடிக்கு மேல் வசூலிச்சும் இது என்ன எங்க படத்துக்கு வந்த சோதனை என்ற ரீதியில் இப்போது படக்குழு நொந்து போய் இருக்கிறார்களாம். அதிலும் இயக்குனர் ஒரு படி மேலே போய் எங்களை தண்டிக்க ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டுள்ளது என பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் புலம்பி வருகிறாராம். இப்படி தியேட்டரில் மாஸ் காட்டிய தி கேரளா ஸ்டோரி ஓடிடி தளங்களில் செல்லா காசாக மாறியிருக்கிறது.

Also read: 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்