பொன்னியின் செல்வனால் அடித்த ஜாக்பாட்.. அடுத்தடுத்து பிசியாகும் மணிரத்தினம்

காதலை மிகவும் எளிமையாகவும், அழகாகவும் தனது படங்களில் மூலம் சொல்லக்கூடியவர் இயக்குனர் மணிரத்னம். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு இருக்கிறது. இதை அவரது பொன்னியின் செல்வன் படம் வெளியான போதே அனைவரும் அறிந்திருக்க கூடும்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க பலர் முற்பட்டனர். ஆனால் அந்தக் கனவை நினைவாக்கி சாதனை படைத்துள்ளார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

Also Read :பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதியை லாக் செய்த மணிரத்னம்.. அடுத்த வசூல் வேட்டை ஆரம்பம்

பொன்னியின் செல்வன் படத்தால் அடுத்தடுத்து மணிரத்னத்திற்கு ஜாக்பாட் அடித்து வருகிறது. அதாவது கமல்ஹாசனின் 234 வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார். நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பின் இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. அதற்கான அறிவிப்பு கமலின் 68-வது பிறந்த நாளான இன்று வெளியானது.

உலக நாயகனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மம்முட்டி, ரஜினி, மணிரத்தினம் கூட்டணியில் வெளியான தளபதி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்போதும் இளைஞர்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு உள்ளது.

Also Read :35 வருடங்களுக்குப் பிறகு இணையும் இரண்டு ஜாம்பவான்கள்.. பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்து திக்கு முக்காட வைத்த ஆண்டவர்

இந்த சூழலில் மீண்டும் ரஜினியின் படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார். இந்த படம் தளபதி போன்ற கதை அம்சம் அல்லது சரித்திர படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதற்கான கதையை ரஜினியிடம் மணிரத்தினம் ஆலோசித்து உள்ளார்.

இந்த படம் குறித்து அறிவிப்பு டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது. கமல் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் கொடுத்தது போல ரஜினி பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இதன் மூலம் காத்திருக்கிறது.

Also Read :அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கும் ரஜினி, கமல் படங்கள்.. மீண்டும் மோதிக் கொள்ளும் உலக நாயகன், சூப்பர் ஸ்டார்

- Advertisement -