வாய் சவடலாக பேசி மாட்டிக்கொள்ளும் விஷால்.. சொல்றது ஒன்னு செய்றது ஒன்னல இருக்கு

Actor Vishal: விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பை பெற்ற வசூலை வாரிக் குவித்து வருகிறது. ஆனால் விஷால் தன்னை நிஜ ஹீரோ என்று நினைத்துக் கொண்டு செய்யும் செயல்கள் ஏதாவது பிரச்சனையில் தான் முடிகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல் அடுத்தடுத்து வாக்குறுதிகளை அள்ளி விட்ட வருகிறார்.

அந்த வகையில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டித் தருவேன் என்று தேர்தலில் போட்டியிடும் போது பேசினார். விஷாலால் விடிவு காலம் கிடைக்கும் என நம்பி அவருக்கு வாக்கு அளித்து ஜெயிக்க வைத்தனர். ஆனால் தற்போது வரை நடிகர் சங்க கட்டிடமும் கட்டவில்லை அவர் திருமணமும் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

Also Read : உதயநிதியை மறைமுகமாக வறுத்தெடுத்த விஷால்.. எங்கேயோ செமத்தயா வாங்கி இருப்பார் போல

அடுத்த வாக்குறுதியாக தமிழ் சினிமாவையே ஆட்டி படைக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிப்பேன் என்று ரைடு போனார். இதற்காக பல லட்சம் செலவு செய்த நிலையில் கடைசியில் எல்லாம் வீணாக போய்விட்டது. மேலும் சினிமா அரசியல் மட்டும் பத்தாது மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என போட்டியிட்டார்.

ஆனால் வேட்பு மனுவில் பிரச்சனை இருப்பதாக சொல்லி இவரது மனுவை நிராகரித்து விட்டனர். இதிலும் அரசியல் சூழ்ச்சி இருப்பதாக அப்போது விஷால் பேசி இருந்தார். இதை அடுத்து ஏழ்மையான ஜோடிக்கு திருமணம் செய்து வைப்பேன் என்று சொல்லியிருந்தார். மேலும் கடைசியாக அவர் செய்திருக்கும் விஷயம் தான் எல்லோரையுமே ஆச்சரியப்பட வைத்தது.

Also Read : விஷால் கூடவே இருந்து குழி பறித்த 4 பேர்.. நண்பன் என்று சொல்லியே முதுகில் குத்திய துரோகிகள்

இந்நிலையில் சமீபத்தில் மகாராஷ்டிராவில் மார்க் ஆண்டனி படத்தை டப்பிங் செய்து வெளியிட்டனர். அப்போது டப்பிங் மற்றும் திரையரங்குகளில் வெளியிடுவதற்காக அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 6.5 லட்சம் கேட்டதாக விஷால் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

மேலும் அப்போது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் இரண்டு பரிவர்த்தனைகளாக பணத்தை கொடுத்ததாக இப்போது விஷால் மாட்டிவிட்டு உள்ளார். அதாவது அதிகாரிகள் பணத்தை கேட்ட போது புகார் கொடுக்காமல் தனது படம் வெளியான பின்பு இப்போது சீன் போட்டு வருகிறார் விஷால் என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : 87 கோடி வசூலுடன் முரட்டு இயக்குனருடன் கைகோர்த்த மார்க் ஆண்டனி.. விக்ரம் இடத்தைப் பிடிக்கும் விஷால்

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -