தவறான சிகிச்சையால் முடங்கிப் போன வாழ்வு.. விக்ரமனின் மனைவிக்கு நடந்தது என்ன.? அதிர்ச்சி ரிப்போர்ட்

Director Vikraman: குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனராக இல்லத்தரசிகளை தியேட்டருக்கு படையெடுத்து வர வைத்த பெருமை விக்ரமனுக்கு உண்டு. பல தரமான படைப்புகளை கொடுத்த அவர் கடந்த சில வருடங்களாக எந்த படத்தையும் இயக்கவில்லை. இதற்கு பின்னணியில் அவருக்கு நடந்த ஒரு விஷயம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அவருடைய மனைவி கடந்த ஐந்து ஆண்டுகளாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். தனக்கு அனைத்து விதத்திலும் பக்கபலமாக இருந்த அவர் எப்பொழுது எழுந்து நடமாடுகிறாரோ அதன் பிறகு தான் படம் இயக்குவேன் என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார் விக்ரமன். இதை சமீபத்திய பேட்டியில் அவர் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் தங்களுடைய வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்த சம்பவம் பற்றியும் விவரித்துள்ளார்.

குச்சிப்புடி டான்ஸரான விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா பல மேடைகளில் நடனம் ஆடியிருக்கிறார். ஆனால் இப்போது அவரால் உட்காரவோ நடக்கவோ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அவருக்கு கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் உடல் வலி காரணமாக ஒரு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு முதுகில் புற்றுநோயாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு ஒரு ஆபரேஷனும் செய்திருக்கின்றனர். அதுதான் பிரச்சனைக்கு காரணமாக இருந்திருக்கிறது. அதாவது நன்றாக மருத்துவமனைக்கு நடந்து சென்ற விக்ரமனின் மனைவி சிகிச்சை முடிந்த போது கால்களை அசைக்கக் கூட முடியாத நிலையில் இருந்திருக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பிய போது ஆபரேஷன் நடந்ததால் அப்படித்தான் இருக்கும் என்று கூறி இருக்கின்றனர்.

அதன் பிறகு தான் தவறான சிகிச்சையினால் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து விக்ரமன் தன்னுடைய மனைவியை சரி செய்வதற்காக தன்னுடைய சொத்தில் 70 சதவீதத்திற்கும் மேலாக விற்றிருக்கிறார். அது மட்டுமின்றி அவரும், மகனும் தான் ஜெயப்பிரியாவை தற்போது கவனித்துக் கொள்கிறார்களாம்.

அவருக்கு இவ்வளவு பெரிய அநீதி நடந்தும் மருத்துவமனையின் பெயரை அவர்கள் சொல்லாததற்கு முக்கிய காரணம் அதன் உரிமையாளர் திரைப்படத்துறையை சேர்ந்த பலருக்கு இலவச மருத்துவம் மற்றும் கல்வி உதவி செய்து வருவது தான். அதனாலயே விக்ரமன் இப்போது அமைதி காத்து வருகிறார். இருப்பினும் அவர்களின் வாழ்வை முடங்க வைத்த அந்த மருத்துவமனை கட்டாயம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பது தான் இப்போது பலரின் ஆதங்கமாக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்