2 குழந்தைகளை கருவிலேயே கலைக்க வைத்த கணவர்.. நடுராத்திரியில் அதிரடி முடிவெடுத்த நடிகை

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பிரபலத்தின் உறவுக்கார பெண்ணாக இருக்கும் இந்த நடிகை, முதலில் பிரபல ரேடியோ சேனலில் ஆர்.ஜே-வாக பணிபுரிந்தார். அதன் பின் தற்போது முன்னணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், படங்களில் கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இவருடைய திருமண வாழ்க்கை மிகவும் கொடூரமாக இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து பலரையும் பதைபதைக்க வைத்துள்ளார். அதிலும் அவருடைய கணவர் இரண்டு குழந்தைகளை கருவிலேயே கலைக்க வைத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகை நள்ளிரவில் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

Also Read: குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாய் மாறிய நடிகை.. தன்னைத் தானே அழித்துக் கொண்ட கொடுமை

அந்த நடிகையின் கணவர் அவரிடம் ராட்சசன் போலவே நடந்திருக்கிறார். குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பே உனக்கு வரக்கூடாது. அதனாலேயே தன்னுடைய வயிற்றில் இருந்த இரண்டு கருவை அந்த நடிகைக்கு தெரியாமலேயே கலைத்து விட்டார்.

இதற்கு அவருடைய குடும்பமும் உடந்தையாக இருந்தது. இதை இன்று வரை அவரால் மறக்க முடியவில்லை அந்த இரண்டு குழந்தைகளையும் நினைத்து தினமும் வருத்தப்படுகிறார். அதே சமயம் அந்தக் குழந்தைகளை நினைத்து சந்தோசமும் படுகிறாராம். ஏனென்றால் ஒருவேளை அவர்கள் இருந்தால் என்னுடன் சேர்ந்து அவர்களும் இப்போது கஷ்டப்பட வேண்டும்.

Also Read: கொழுக் மொழுக் நடிகையை உருகி உருகி காதலித்த ஹீரோ.. சைக்கோ தனத்தை காட்டி விரட்டி விட்ட காதலி

இப்படி புகுந்த வீட்டில் ஏகப்பட்ட மன உளைச்சலை சந்தித்துக் கொண்டிருந்தது, அந்த நடிகையின் பிறந்த வீட்டிற்கு தெரியாமல் இருந்திருக்கிறது. ஆனால் கணவர் மனைவியிடையே பிரச்சனை இருக்கிறது என்பது தெரியும். இதனால் ஒரு நாள் அந்த நடிகை ஒரு தெளிவான முடிவை எடுத்து வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

அம்மா வீட்டிற்கு சென்ற பின், ‘என்னுடைய முடிவு இதுதான். இனிமேல் எனக்கு திருமண வாழ்க்கை வேண்டவே வேண்டாம். நான் என்னுடைய சுய உணர்வோடு இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். ஒருவேளை இனிமேலும் வலுக்கட்டாயமாக என்னை அங்கு வாழ வைக்க நினைத்தால் நிச்சயம் செத்துப் போய் விடுவேன்’ என்று அந்த நடிகை நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளிவந்து தற்போது முன்னணி சீரியல்களில் செம போல்டாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: நைட்டு மூணு மணிக்கு போன் செய்து அந்த மாதிரி உறவுக்கு அழைப்பாங்க! வேதனையில் பேசிய நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்